/tamil-ie/media/media_files/uploads/2019/08/vanitha.jpg)
Chandrayaan-2,ISRO,Chandrayaan-2 Mission, project director of Chandrayaan - 2, ராக்கெட் பெண்மணி வனிதா முத்தையா, சந்திராயன் - 2 திட்ட இயக்குனர், vanitha muthaiyya, rocket woman vanitha muthaiyya,
Rocket Woman Vanitha Muthaiyya: இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய ஆளில்லாத விண்கலம் சந்திராயன் 2-ஐ செலுத்தியதில் இரண்டு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பொறுப்பில் செயல்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வனிதா முத்தையா, மற்றொருவர் ரிது கரிதால். தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா ராக்கெட் பெண்மணி என்று ஊடகங்களால் புகழப்படுகிறார்.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் - 2, 3,290 கிலோ எடை கொண்டது. இந்த சந்திராயன் - 2 விண்கலத்தை செலுதியதில் வனிதா முத்தையாவும் ரிது கரிதாலும் முக்கிய பொறுப்பு வகித்துள்ளனர். இதில் வனிதா முத்தையா என்ற பெயரை படித்ததுமே இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்துவிடுகிறது. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியாளர்.
இஸ்ரோ விஞ்ஞானி வனிதா முத்தையா சந்திராயன் - 2 திட்டத்தின் இயக்குனராக உள்ளார். திட்ட இயக்குனர் என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பது, விண்கலத்தை இறுதி வடிவத்துக்கு கொண்டுவந்து விண்கலத்தை அனுப்பும் வரை பொறுப்பு ஏற்று செயல்படுத்துவதாகும். இந்த முக்கிய பொறுப்பை வகிக்கும் வனிதா முத்தையா இஸ்ரோவின் பல முக்கிய விண்கலங்களில் செயல்பட்டுள்ளார். இவர் இஸ்ரோவில் கடந்த 32 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
விஞ்ஞானி வனிதா முத்தையா இதற்கு முன்பு கார்டோசாட் -1, ஓசன்சாட் - 2 உள்ளிட்ட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு அஸ்ட்ரானாட்டிகள் சொசைட்டி ஆஃப் இந்தியா 2006 ஆம் ஆண்டு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நேச்சர் என்ற சர்வதேச ஆய்விதழ் இவரை கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இவரை ஊடகங்கள் ராக்கெட் பெண்மணி என்று புகழ்ந்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.