/tamil-ie/media/media_files/uploads/2020/07/shiv-nadar.jpg)
Roshini Nadar Malhotra is the new chief of HCL Tech : ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் தன்னுடைய பொறுப்பில் இருந்து விடுபடுவதாகவும், தன்னுடைய பதவிக்கு அவர் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா வர இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகத்தின் முடிவுகள் படி 17ம் தேதி தன்னுடைய பதவியில் இருந்து விலக உள்ளார் ஷிவ் நாடார். தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் தலைமை இயக்குநராகவும், ஸ்ட்ரேடஜி அதிகாரியாகவும் அவர் நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : பார்வையற்றவருக்கு உதவிய கேரள பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி பரிசு!
38 வயதாகும் ரோஷிணி 2019ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் அவர். உலகின் பணக்கார பெண்களில் ஒருவருமாக கருதப்படும் அவரிடம் ரூ. 36,800 கோடி அளவில் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கெல்லாக் மேலாண்மை பள்ளியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். எச்.சி.எல். டெக்னாலலீஸின் தலைவராக அவர் கடந்த ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் உயர்த்தப்பட்டிருக்கிறார். இன்று அவர் அந்த பொறுப்பேற்க உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.