/tamil-ie/media/media_files/uploads/2018/10/tn_in-icf-train18-testing.jpg)
Train 18
இந்தியாவின் அதிவேக ரயிலான சதாப்தியின் சாதனையை முறியடிக்க உருவாக்கப்பட்டிருக்கிறது ட்ரெய்ன் 18 (Train 18 )என்ற அதிவேக ரயில். சதாப்தி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 30 வருடங்கள் ஆகியுள்ளன.
மணிக்கு சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ட்ரெய்ன் இது. ஆனால் தற்போது சென்னை பெரம்பூரில் உருவாக்கப்பட்டிருக்கும் ட்ரெயின் 18 அதிவேக ரயில் மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலின் அறிமுக விழா நேற்று பெரம்பூரில் நடைபெற்றது. இந்த ட்ரெயினை அறிமுகப்படுத்தி பேசினார் ரயில்வே போர்ட் சேர்மன் அஷ்வானி லோஹனி.
ட்ரெயின் 18’ஐ உருவாக்கக் கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆனது என்று அவர் குறிப்பிடார். சென்னையில் சோதனையோட்டங்கள் முடிவுற்ற பின்னால் நவம்பர் 7ம் தேதி டெல்லி சென்றடையும். டெல்லி மற்றும் போபால் இடையில் பயணித்து வரும் சதாப்தி ரயிலுக்கு மாற்றாக இந்த ட்ரெய்ன் 18 பயணிக்க இருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த Train 18 ரயிலின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
- 16 கோச்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் 2 உயர்வகுப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டிக்கிறது.
- ஒவ்வொரு பெட்டியிலும் தலா 52 இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகள் அனைத்தும் 360 டிகிரி சுழலும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மீதம் இருக்கும் கோச்களில் 78 இருக்கைகள் உள்ளன.
- வைஃபை, ஆட்டோமேட்டிக் டோர்ஸ், குறைந்த அளவு நீரினை பயன்படுத்தும் உறிஞ்சுக் கழிவறைகள், ஜி.பி.எஸ் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறாது.
- மெட்ரோ ட்ரெய்ன்கள் போலவே இதிலும், ட்ரெய்ன் நின்ற பின்னரே ட்ரெயினின் கதவுகள் திறக்கும்.
- மாற்றுத் திறனாளிகளும் எளிதாக ரயிலில் ஏற வழி செய்யும் வகையிலும், ரயில் ஏறும் போது ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பாய் இருக்கும் வகையில் ஸ்லைடர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.