ராகுல் காந்தி, நிருபுரை பார்த்து உன் பெயர் என்ன என்றும் அவரது செய்தி நிறுவனத்தின் உரிமையாளரை பற்றி கேள்வி எழுப்பிது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் உள்ள ரேபரலி மாவட்டத்தில்’ இந்தியா நியூஸ்’ என்ற தொலைகாட்சியின் செய்தியாளரிடம் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதம் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிறைந்திருந்த இந்த நிகழ்வில், ராகுல் காந்தி மைக்கில் இவ்வாறு கூறினார். ’ அவரை நீங்கள் ஒன்றும் செய்யதீர்கள், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் யார் ? அவர் ஓ.பி.சி-யா அல்லது தலித்தா ? ‘ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் ’நீங்கள் எந்த ஊடகத்தில் இருந்து வந்துள்ளீர்கள்? உங்கள் பெயர் என்ன? உங்கள் பெயரை சொல்லவும். நீங்கள் ஷிவ்பிரசாத் ஜி தானா? அவரை யாரும் அடிக்க வேண்டாம். உங்கள் ஊடகத்தின் உரிமையாளர் யார்? அவர் ஓ.பி.சி-யா அல்லது தலித்தா என்று கேள்வி எழுப்பி உ;ள்ளார்.
இந்நிலையில் இந்த பத்திரிக்கையாளர், காங்கிரஸ் தொண்டர்களை மைக்கை நீக்க வேண்டாம் என்று கூறி உள்ளார். மேலும் ராகுல் காந்தியிடம் , இந்த நிகழ்வை ஏன் தன்னை முழுவதுமாக பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஷலப் மணி திரிபாதி கூறுகையில் “ ஷிவ்பிரசாத் , தனக்கு வழங்கப்பட்ட செய்தியாளர் வேலையை மட்டுமே செய்தார். அவரால் காங்கிரஸ் கைக்கூலியாக இருக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கார்டியன் பத்திரிக்கையின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஷர்மா கூறுகையில் “ சமந்தப்பட்ட பத்திரிக்கையாளருக்கு சிறிய அளவில் காயங்கள் உள்ளது. அவர் அச்சத்தில் உள்ளார். இது தொடர்பாக புகார் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் உள்ள வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறோம். சாதியை கேட்டு இழுவுப்படுத்தியது சரி இல்லை. அவர் நீண்ட நாட்களாக வேலை செய்யும் செய்தியாளர். அவரை அடிக்க வேண்டாம் என்று ராகுல் கூறி, ஒரு கும்பலை தூண்டிவிடுவது சரியில்லை” என்று அவர் கூறினார்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“