RRB Expected to Release Group D 2018 Exam Date, City, Timing: இந்தியன் ரயில்வே துறையில் குரூப் டி தேர்வு எழுதுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி தேர்வை நடத்தி வருகிறது. இதுக் குறித்த முதல் அறிவிப்பு கடந்த பிப்ரவரி 2ம் தேதி வெளியானது. ஆர்ஆர்பி வெளியிட்ட இந்த அறிவிப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
குரூப் டி-க்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது அதற்கு இணையான வேறு சான்றிதழ் போன்றவற்றைப் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அதிகபட்ச வயது 32ல் இருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டு இருந்தது.
குரூப் டி-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 மொழிகளில் கேள்வி தாள்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கையெழுத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் என்று இல்லாமல் அனைத்து மொழிகளிலும் போட அனுமதி அளித்துள்ளனர்.
RRB Group D 2018 Exam : தேர்வு குறித்த முழு விபரத்தை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்!
குரூப்-டி பிரிவுக்கு அடுத்த மார்ச் 12-ந்தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு ஏபரல் மாதம் 5-ந்தேதி வரையும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்வும் ஆன்-லைன் மூலம் நடைபெறவுள்ளதால், இதற்காக விண்ணப்பித்தவர்கள் அட்மிர்ட் கார்டை இணையதளத்தில் பெயர் மற்றும் முகவரியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு நடைபெறும் தேதி, பாடப்பிரிவுகள், எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் குறித்த முழு விபரத்தை indiarail.gov.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அந்த மாநிலத்திற்கு ஏற்ப இந்தியன் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.