RRB Group D 2018 : ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகள் பண்டிகை காலங்களின் நடைபெறாது என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் வரும் அக்டோபர் 22 முதல் 26 வரை தேர்வு எழுதலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகள் எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களின் தேர்வு மையம் மற்றும் இதர தகவல்களை rrbald.gov.in என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB Group D 2018 : தேர்வு தேதிகளில் மாற்றம்!
வடமாநிலங்களை பொருத்தவரையில் துர்கா பூஜை, தசாரா போன்ற பண்டிகைகள் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் காரணமாக வடமாநிலங்களில் நடைபெறவிருந்த ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த தேர்வுகள் அக்டோபர் 17 - 22 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வடக்கு ரயில்வேதுறை முதன்மை அதிகாரி அங்கராக் மோகன், ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகள் பண்டிகை காலங்களில் நடைபெறுவது மாற்றப்பட்டுள்ளது என்றார். மேலும் வரும் அக்டோபர் 22 முதல் 26 வரை விண்ணபித்தவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று கூறினார்.
அதே போல் இந்த தேதிகளில் நடைபெறும் தேர்வுகளின் அட்டவணை நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களும் வரும் 18 ஆம் தேதி அழைப்பு கடிதம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி விபரங்கள்:
மொத்தம் 90 நிமிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும். கணிதம் பாடப்பிரிவில் இருந்து 25 கேள்விகள், பொது அறிவு பிரிவில் 30 கேள்விகள், பொது அறிவியல் பிரிவில் 25 கேள்விகள், பொது தற்காப்பு பிரிவில் 20 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.