/tamil-ie/media/media_files/uploads/2018/09/2-49.jpg)
b-ed exam date
RRB Group D Admit Card: இந்தியன் ரயில்வே துறையில் குரூப் டி தேர்வுக்கான அட்மிட் கார்ட்யை இணையதளத்தில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RRB Group D Admit Card, Hall Tickets for September 25, 26 & 27 Exams are Released Today: 62,907 காலியிடங்கள்
இந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி கீழ் நிரப்ப இருப்பதாகப் பிப்ரவர் 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்ஆர்பி வெளியிட்ட அந்த அறிவிப்பில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு பலரையும் வியக்க வைத்திருந்தது.
ரயில்வே துறை வெளியிட்டு இருந்த அறிவிப்பில் குரூப் டி-க்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது அதற்கு இணையான வேறு சான்றிதழ் போன்றவற்றைப் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அதிகபட்ச வயது 32ல் இருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டு இருந்தது.
குரூப் டி-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 மொழிகளில் கேள்வி தாள்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கையெழுத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் என்று இல்லாமல் அனைத்து மொழிகளிலும் போட அனுமதி அளித்துள்ளனர்.
பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.500ம், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ. 250ம் விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி!
குரூப்-டி பிரிவுக்கு அடுத்த மார்ச் 12-ந்தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு ஏபரல் மாதம் 5-ந்தேதி வரையும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்வும் ஆன்-லைன் மூலம் நடைபெறவுள்ளதால், இதற்காக விண்ணப்பித்தவர்கள் அட்மிர்ட் கார்டை இணையதளத்தில் பெயர் மற்றும் முகவரியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.