RRB Group D exam 2018Analysis: இந்தியன் ரயில்வே துறையில் குரூப் டி தேர்வு எழுதுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டடுள்ள பாடங்களை அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். மேலும் இந்த தேர்வில் 3 பிரிவுகளாக பிரித்து கேட்கப்படும் கேள்வி விவரங்கள் குறித்தும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
62,907 காலியிடங்கள் இந்திய ரயில்வே துறை 62,907 பணியிடங்களை நாடு முழுவது குரூப் டி கீழ் நிரப்ப இருப்பதாகப் பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்ஆர்பி வெளியிட்ட அந்த அறிவிப்பில் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு பலரையும் வியக்க வைத்திருந்தது.
RRB Group D exam 2018Analysis: யார் யார் விண்ணபிக்க வேண்டும்!
குரூப்-டி பிரிவுக்கு அடுத்த மார்ச் 12-ந்தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு ஏபரல் மாதம் 5-ந்தேதி வரையும் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்வும் ஆன்-லைன் மூலம் நடைபெறவுள்ளதால், இதற்காக விண்ணப்பித்தவர்கள் அட்மிர்ட் கார்டை இணையதளத்தில் பெயர் மற்றும் முகவரியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் அதிகபட்ச வயது 32ல் இருந்து 31 ஆகக் குறைக்கப்பட்டு இருந்தது.குரூப் டி-க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 மொழிகளில் கேள்வி தாள்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கையெழுத்தும் இந்தி அல்லது ஆங்கிலம் என்று இல்லாமல் அனைத்து மொழிகளிலும் போட அனுமதி அளித்துள்ளனர்.
பாடத்திட்டம்:
1. கணிதம், பொது அறிவு, வேதியியல், இயற்பியல், உயிரியல் 3 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல் பாடத்திட்டத்தில் 9-11 கேள்விகள், வேதியியல் 8-9 கேள்விகள், உயிரியலில் 9- 10 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.