உத்தரப்பிரதேசத்தில், ஒரே நேரத்தில் 50 முட்டை, ஒரு பாட்டில் மது சாப்பிடுகிறேன் என்று பந்தயத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர் ஒருவர் 42வது முட்டையை சாப்பிடும்போது மயங்கி விழுந்து பலியானார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் (வயது 42. இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கே அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் அதிகப்பட்சமாக எத்தனை முட்டை சாப்பிடம் முடியும் என்று விவாதம் எழுந்துள்ளது. அப்போது சுபாஷ் 50 முட்டை சாப்பிட முடியும் என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத நண்பர்கள் விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர்.
50 முட்டைகள் சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும். அப்படி செய்தால் ரூ.2000 பந்தயம் என்று கூறியுள்ளனர். அதற்காக முன்பணமாக ரூ.250 கொடுத்துள்ளனர்.
நண்பர்களுடன் பந்தயத்தை ஒப்புக்கொண்ட சுபாஷ் முட்டையை சாப்பிடத் தொடங்கினார். ஒன்று இரண்டு என 41 முட்டைகளை சுபாஷ் சாப்பிட்டார். விரைவில அவர் 50 முட்டைகளை சாப்பிட்டு முடித்துவிட்டு பந்தயத் தொகையான ரூ.2000 த்தை பெறுவார் என்று அங்கிருந்த நண்பர்கள் எல்லாம் எதிர்பார்த்த நிலையில், 42வது முட்டையை சாப்பிடும்போது சுபாஷ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத நண்பர்கள் உடனடியாக சுபாஷை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருதுவர்கள் சுபாஷை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து, நண்பர்கள் சுபாஷை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அதற்குள் சுபாஷ் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்கின்றனர்.
முட்டை சாப்பிடும் பந்தயத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர் சுபாஷுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்று அவர் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் சுபாஷ் முட்டை சாப்பிடும் பந்தயத்தில் ஈடுபட்டு பலியான சம்பவம் அவருடைய குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.