இந்திய ரிசவர் வங்கி (ஆர்.பி.ஐ) 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகவும் டிசம்பர் 31, 2019 -க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்றும் சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் குறித்து ஆர்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
நவம்பர், 2016, ஆம் ஆண்டு பிரதமர் அறிவித்த மணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவூட்டும் விதமாக வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி இந்திய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அது அப்படி என்ன செய்தி என்றால், டிசம்பர் 31, 2019-க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாது. ஆர்.பி.ஐ ஜனவரி 1, 2020 ஆண்டு முதல் 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாகவும், அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் ஆர்.பி.ஐ திரும்பப் பெறுவதாகவும் அந்த ஃபார்வர்ட் செய்தி தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.50,000 மாற்ற முடியும் நெறும் அதனால், உடனடியாக ரூ.2000 நோட்டுகளை மாற்றத் தொடங்குங்கள் என்று அந்த செய்தி கூறுகிறது.
வாட்ஸ்அப்பில் பலராலும் பகிரப்பட்டு செய்யப்பட்டு வேகமாக பரவிவரும் இந்த செய்தியைப் பார்க்கும் பலரையும் பீதியடையச் செய்துள்ளது.
செய்தியின் உண்மைத் தன்மை தெரியாமல் அதை உறுதி செய்யாமல் பலரும் தனது நண்பர்கள் மற்றும் குழுவில் பகிர்ந்து வருகின்றனர்.
நவம்பர் 8, 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது எனவும் அதனை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் அளித்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தார். இதனால், பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.
#PIBFactCheck
Claim: Whatsapp msgs/YouTube channels claim that RBI is releasing new ₹ 1000 notes and discontinuing the ₹ 2000 notes.
Reality: There is no such announcement by @RBI.
Conclusion: #FakeNews pic.twitter.com/6JBRftMf7z— PIB India (@PIB_India) December 5, 2019
தற்போது வாட்ஸ்அப்பில் பரவிவரும் டிசம்பர் 31க்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டு மாற்ற முடியாது என்ற தகவலைப் பார்த்து பலரும் பீதியடைந்த நிலையில், வாட்ஸ்அப், யூ டியுப் சேனல்கள், ஆர்பிஐ, புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடுகிறது என்றும் 2000 ரூபாய் நோட்டு தொடராது என்றும் வெளியிட்டுள்ள செய்தி போலியானது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) இத்தகைய தகவல்களை போலியான செய்தி என்றும் ஆர்.பி.ஐ அது போன்ற அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்று அறிவித்து மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
அது மட்டுமில்லாமல், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கடந்த 11ம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய இணைய நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், , அரசுக்கு அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
சமாஜ்வாடி கட்சி எம்.பி விஷாம்பர் பிரசாத் நிஷாத், புதிய 1000 ரூபாய் நோட்டுகளை 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக மறுபடியும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதாவது உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். “2000 ரூபாய் நோட்டு அறிமுகத்தால் கருப்புப் பணம் அதிகரித்துள்ளதாகவும்” அவர் கூறினார். மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாக மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகக் கூறினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்கூர், “ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் உண்மையில் கவலை அளிக்கக் கூடியது. இது இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, கருப்பு பணத்தை ஒழித்தல், கள்ளநோட்டுகளை ஒழித்தல், பயங்கரவாத நிதியுதவி மற்றும் இடதுசாரி திவிரவாத நிதியுதவிகளை ஒழிப்பதும் நோக்கம் ஆகும். மேலும், முறைசாரா பொருளாதாரத்திலிருந்து முறையான பொருளாதாரத்துக்கு மாறி வரி தளத்தை விரிவுபடுத்தவும் டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவதும் நோக்கம் என்று அனுராக் தாக்கூர் அவையில் கூறினார்.
இருப்பினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ஆண்டுகளில் ரூபாய் நோட்டுகள் புழக்கம் உண்மையில் அதிகரித்துள்ளது என்று தாக்கூர் ஒப்புக்கொண்டார். நவம்பர் 4, 2016 நிலவரப்படி ரூ.17,741.87 பில்லியனாக இருந்தது. அவை இப்போது டிசம்பர் 2, 2019 நிலவரப்படி ரூ.22,356.48 பில்லியனாக அதிகரித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.