Advertisment

ரூ.62 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்: ஆன்லைனில் பரபரப்பு புகார்

கடந்த ஜனவரி மாதம் 10,500 ரூபாய் முன்னாள் ராணுவ வீரர் முதலீடு செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rs 62 lakh money laundering from an army soldier in Puducherry

Salem police

புதுச்சேரி அருகே உள்ள முருங்கப் பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் முருகன் (56). இவர், ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்குமா என்று தன்னுடைய செல்போனில் தேடினார்.
அப்போது இன்ஸ்டாகிராமில் ENTERTAINMENT ONE என்ற போலி நிறுவனத்திலிருந்து ஒரு LINK அழைப்பு வந்தது இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 20% அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என அவரது ஆசையை அந்த லிங்க் தூண்டிவிட்டது.

Advertisment

மேலும் முதல் முறை முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நாங்களும் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ அதே அளவு பணம் போனஸ் தருவோம்.
எங்களிடம் பிளாட்டினம் பிரீமியம் ஸ்பெஷல் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகள் எங்களிடம் உள்ளன. என்று கூறியுள்ளனர். அதை நம்பி கடந்த ஜனவரி மாதம் 10,500 ரூபாய் முன்னாள் ராணுவ வீரர் முதலீடு செய்துள்ளார்.

அவர்களும் அதற்கு ஈடாக 10,500 பணத்தை போட்டு அன்றைய தினமே 30 வீடியோக்களை அனுப்பி உள்ளனர் அதைப் பார்த்து Review சொல்ல வேண்டும் என்றும் review சொன்னவுடன் 22,200 அவர் வங்கி கணக்கில் பணம் அனுப்பினர்.
அதை நம்பி பிப்ரவரி மார்ச் மாதங்களில் 32 லட்சம் அவர்கள் சொல்லுகிற பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை முதலீடு செய்கிறார் ஆனால் அவருடைய செல்போனில் அவர் சம்பாதித்த லாபத்தை சேர்த்து அவருடைய ராணுவ வீரரின் கணக்கில் 58 லட்சம் பணம் இருப்பதாக அந்த என்டர்டைன்மென்ட் ஒன் APP காட்டியுள்ளது.

உடனடியாக முன்னாள் ராணுவ வீரர் முருகன் அந்த பணத்தை எடுக்க முயற்சித்த போது உங்களுக்கு ERROR காட்டுகிறது என்றும் இதற்கு நீங்கள் வரி கட்டினால் மேற்கண்ட பணத்தை நீங்கள் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு வரி கட்டுவதற்காக அவர்கள் சொல்லிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை முன்னாள் ராணுவ வீரர் முருகன் செலுத்தியுள்ளார் . தற்போது அவருடைய கணக்கில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் இருப்பதாக காட்டியுள்ளது.

அந்தப் பணத்தை எடுக்க இன்னமும் வரி செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறியதால் தன்னிடம் இருந்த அனைத்து பணம் நகை கடன் அனைத்தையும் முதலீடு செய்துவிட்டார்.
தன் கணக்கில் இருக்கின்ற பணத்தையே தன்னால் எடுக்க முடியவில்லை என்பதை உணர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன் இன்று புதுச்சேரி சைபர் கிரைம் இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கூறுகையில், “பல்வேறு முறை இது போன்ற இன்ஸ்டாகிராம் டெலகிராம் ஆகியவற்றில் வருகின்ற லிங்கை நம்பி பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பத்திரிகைகள் வாயிலாகவும் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம்.

மேலும் telegram instagram மூலமாக வருகின்ற இது போன்ற வேலைவாய்ப்புகள் 100% பொதுமக்களை ஏமாற்றவும் அவர்களுடைய பணத்தை மோசடி செய்ய மட்டுமே இணைய வழி மோசடிக்காரர்கள் இதுபோன்ற லிங்கை பயன்படுத்துகின்றனர்.

வேலைவாய்ப்பை தருவதற்கு பல்வேறு வலைதளங்கள் இருக்கும்போது இந்த டெலிகிராம் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்ற மோசடிக்காரர்களை எளிதில் கண்டுபிடிக்காமல் இருக்க மேற்கண்ட இன்ஸ்டாகிராம் டெலிகிராமை இணைய வழி மோசடிக்காரர்கள் உபயோகப்படுத்துகின்றனர்.

ஆகவே பொதுமக்கள் இது போன்ற லிங்கை நம்பி பணங்களை முதலீடு செய்ய வேண்டாம். இன்ஸ்டாகிராம் டெலிகிராம் போன்றவற்றில் வருகின்ற வேலைவாய்ப்புகள் முதலீடுகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் திருமண வரன் தேடுவது போன்ற பெரும்பாலும் இணைய வழி மோசடிக்காரர்களின் மோசடி வேலையாக உள்ளது.

இதனால், பொதுமக்கள் இது போன்ற சமூக வலைதளங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் இணைய வழி காவல்துறை எதிர் முனையில் நம்முடைய பணத்தை பெறுகின்ற நபர் உண்மையான நபர் தானா என்பதை உறுதிப்படுத்தாமல் எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் புதுச்சேரி இணையவழி காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்தனர்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment