ஆர்.சந்திரன்
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் முக்கிய பொறுப்பில் இருந்த நிறுவனம் ஓரியண்ட்ல் பேங்க் ஆப் காமர்ஸில் கடன்பெற்று மோசடி செய்துவிட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது
இந்தியாவின் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிம்போலி சுகர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவராக குர்மித் சிங் மான் என்பவர் செயல்பட, அதன் துணைப் பொது மேலாளர் பொறுப்பில் இருந்தது குர்பால் சிங்.., அதாவது, பஞ்சாப் முதல்வரின் மருமகன். இந்த வங்கியின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மீது இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிறுவனம் இருமுறை ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸில் கடன் பெற்றுள்ளது. முதல் கடன் 97.85 கோடி ரூபாய். 2015ல், இது வங்கி நிதி மோசடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்தவும் இல்லை. அதன்பின், மீண்டும் 2011ல் அதே வங்கியில் 148 கோடி ரூபாய் கடன்பெறப்பட்டுள்ளது. இது, இந்த நிறுவனத்துக்கு கரும்பு சப்ளை செய்து வந்த விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கிப் பணத்தை தருவதற்காக என சொல்லி கடன்பெறப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு செலவிடவில்லை எனத் தெரிகிறது.
இந்த 2வது கடனைக் கொண்டு, நிறுவனத்தின் பல தேவைகளை செய்து கொண்டதுடன், முதல் கடனைத் திருப்பிச் செலுத்தியதுள்ளதாக கூறப்படுகிறது. 2016 நவம்பரில் இந்த 2வது கடனும் வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துள்ளது. இதனால், தற்போது கடன் கொடுத்த வங்கிக்கு சுமார் 110 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தற்போது புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி மோசடி குறித்து சிம்போலி சுகர் நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சிபிஐ நேற்று, அதாவது ஞாயிறு அன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது குறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து சிபிஐயால், இந்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.