Priyanka hits, RSS-BJP’s real target is social justice: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஒரு உரையாடலுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ஆர்.எஸ்.எஸ்.-சின் தாக்குதல் இலக்கு சமூகநீதி மீதுதான் என்று விமர்சித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மக்கள் சார்பு சட்டங்களைத் நசுக்குகிறது என்று குற்றம் சாட்டிய பிரியங்கா, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் உண்மையான தாக்குதல் இலக்கு சமூகநீதி என்றும் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.-சின் நம்பிக்கை அதிகமாகவும் அதன் நோக்கங்கள் ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக அரசு மக்கள் சார்பு சட்டங்களை நசுக்கும் அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீடு குறித்த விவாவதப் பிரச்னையையும் எழுப்பியுள்ளது என்று தனது டுவிட்டில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி மேலும் கூறுகையில் “ஆர்.எஸ்.எஸ்.-சின் விவாதம் ஒரு சாக்குதான்.
ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் உண்மையான தாக்குதல் இலக்கு சமூகநீதிதான். இது நடக்க அனுமதிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் இடையில் ஒரு இணக்கமான சூழ்நிலையில் உரையாடல் இருக்க வேண்டும் என்று திங்கள் கிழமை மோகன் பகவத் கூறியபோது சர்ச்சை வெடித்தது.
காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்-ஸை தலித் எதிர்ப்பாளர்கள் என்று அழைத்ததோடு, இடஒதுக்கீடு முறையைத் அழிக்க விரும்புகிறார்கள் என்று கூறி விமர்சித்தது.
ஆர்.எஸ்.எஸ் இது தேவையற்ற சர்ச்சை என்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது என்றும் கூறியது.
ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் பிரமுக் அருண்குமார், ஆர்.எஸ்.எஸ் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது என்று அமைப்பு மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறினார்.
“டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் உரையில் ஒரு பகுதியைப் பற்றி தேவையற்ற சர்ச்சை உருவாக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பரஸ்பர கலந்துரையாடலின் மூலம் இணக்கமான முறையில் தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில், இடஒதுக்கீடு போன்ற முக்கியமான விஷயங்களையும் இதேபோன்று பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக” பிரமுக் குமார் கூறினார்.
So the RSS has declared in a tweet that all “issues in the society” should be resolved through cordial dialogue?
I suppose either Modiji and his government no longer respect the RSS’s views or they don’t believe that there is an “issue” in Jammu and Kashmir. Interesting....— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 19, 2019
இதனைத் தொடர்ந்து, நேற்று பிரியங்கா காந்தி கூறுகையில், பிரதமர் மோடியும் அவரது அரசும் அனைத்து பிரச்னைகளையும் நல்ல உரையாடல் மூலம் தீர்க்க வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். கருத்துகளை மதிக்கவில்லை அல்லது ஜம்மு காஷ்மீரில் பிரச்னை இருப்பதாக அவர்கள் நம்பவில்லை என்று விமர்சனம் செய்தார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதம் தேவையில்லை - பாஸ்வான்
இதனிடையே, பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இடஒதுக்கீடு பிரச்சினையில் எந்தவொரு விவாதமும் தேவையில்லை என்று வாதிட்டார், இது சமூகத்தின் பலவீனமான பிரிவினரின் அரசியலமைப்பு உரிமை என்று கூறினார்.
“இடஒதுக்கீடு குறித்து எந்த விவாதமும் தேவையில்லை. இது இப்போது உயர் சாதி ஏழைகளுக்குக் கூட கிடைக்கிறது, எனவே இது முடிவுக்கு வருவது சாத்தியமில்லை, ”என்று பாஸ்வான் கூறினார். பிரதமர் மோடி, இட ஒதுக்கீட்டை மாற்ற முடியாது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார் என்று பாஸ்வான் எடுத்துரைத்தார். இருப்பினும், அவர் மோகன் பகவத்தின் கருத்துக்களுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர் கூறியது பற்றி விவரமான தகவல் தனக்கு கிடைக்கவில்லை என்று பாஸ்வான் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.