மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இடையே சலசலப்பு, கருத்து மோதல் நடந்த நிலையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (சனிக்கிழமை) ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை கோரக்பூரில் சந்தித்து பேசினார்.
சனிக்கிழமையன்று இரண்டு முறை ஆதித்யநாத் பகவத்தை சந்தித்ததாக கோரக்பூர் வட்டாரங்கள் உறுதி செய்தன, முதலில் மதியம் கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் பகவத் ஒரு கூட்டம் மற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து இரவும் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். இரவு 8:30 மணியளவில் நகரின் பக்கிபாக் பகுதியில் உள்ள சரஸ்வதி ஷிஸ்சு கோயிலில் சந்தித்து பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று 2 முறை நடைபெற்ற சந்திப்புகளும் தலா 30 நிமிடங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய கோரக்பூரில் உள்ள மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு பகவத் கோரக்பூருக்குச் செல்வது வழக்கமான பயணம் அல்ல.
உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்விக்கான முக்கியக் காரணங்கள் குறித்து ஆதித்யநாத்துடன் பகவத் கலந்துரையாடியதாக அவர் கூறினார். பாஜக வலுவான நிலையில் காணப்பட்ட உ.பி-ல் இப்போது ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து அவர் பேசியிருப்பார் என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/lucknow/rss-chief-bhagwat-holds-closed-door-meetings-with-yogi-in-gorakhpur-9395196/
பகவத், புதன்கிழமை அன்றே கோரக்பூர் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அலுவலகப் பொறுப்பாளர்களுடன் அவர் பல சுற்று கூட்டங்களை நடத்தினார். தேர்தல் குறித்த அறிக்கைகளைப் பெற்றதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“