டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது கட்டுமானப் பணியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகமான கேசவ் குஞ்ச் மற்றும் உதாசின் ஆசிரம பாதுகாப்பை சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைத்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் இருந்து பெரும்பாலும் பணியாற்றுகிறார். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு டெல்லியிலும் புதிய தலைமையகம் கட்டப்பட்டுவருகிறது.
மேலும் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவந்தது எனத் தகவல்கள் கூறுகின்றன. சிஐஎஸ்எஃப் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
இதனால், பயங்கரவா அச்சுறுத்தலை எதிர்கொண்டுவரும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தின் பாதுகாப்பு சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதனால் வளாகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகப்பு மற்றும் பின்புறம் மற்றும் முக்கிய இடங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஏற்கனவே சிஐஎஸ்எஃப்பின் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். மேலும் நாக்பூர் அலுவலகத்துக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil