செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது. அதற்கு தலைமை வகித்து ப்யூச்சர் ஆஃப் பாரத் : ஆன் ஆர்.எஸ்.எஸ் பெர்ஸ்பெக்டிவ் (Future of Bharat: An RSS perspective) என்ற தலைப்பில் பேசப் போகிறார் மோகன் பகவத்.
மூன்று நாள் நடைபெற இருக்கும் இந்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி 60 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.
மேலும் இந்தியாவில் இருக்கும் தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் மாநாடு 60 நாடுகளுக்கு அழைப்பு
ஆசியாவில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் தங்களின் அழைப்பினை விடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. பாகிஸ்தானில் தீவிரவாதமும் இந்திய ராணுவ வீரர்களை கொல்லும் பழக்கமும் அதிகரித்து வருவதால் பாகிஸ்தானிற்கு அழைப்பு தரவில்லை ஆனால் சீனாவுடன் கலாச்சார ஒருமைப்பாடு இருப்பதால் சீனாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.
பாகிஸ்தானிற்கு ஏன் அழைப்பிதழ் தரவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் டெல்லி ப்ரசாக் ப்ரமுக் ராஜீவ் டுலி.
மூன்று நாள் நடைபெற இருக்கும் விழாவில் முதல் நாள் ஆர்.எஸ். எஸ் அமைப்பின் கொள்கை, எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசப்படும்.
அடுத்தநாள் மோகன் பகவத் இந்தியாவில் இடஒதுக்கீடு, இந்துத்துவா, மற்றும் மதக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றி பேச இருக்கிறார்.