Advertisment

இந்திய சமூகத்தில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள், இஸ்லாமியப் படையெடுப்புகளே காரணம்- ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி கிருஷ்ண கோபால்

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்... ஆனால் பெண்ணாக இருங்கள். ஒரு பெண் வீட்டின் மையமாக இருக்கிறாள், அதை நினைவில் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Krishna Gopal

ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால்

இஸ்லாமியப் படையெடுப்புகளின் காரணமாகவே குழந்தைத் திருமணம், சதி, விதவை மறுமணத் தடை, பெண்களின் கல்வியறிவின்மை போன்ற மரபுகள் இந்திய சமூகத்தில் ஊடுருவியதாக ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

நாரி சக்தி சங்கத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகத்தில் பெண்கள் அதிகாரம் பற்றி பேசிய கோபால், 12ஆம் நூற்றாண்டுக்கு முன், பெண்கள் சுதந்திரமாக இருந்தனர் மற்றும் இந்திய சமுதாயத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர், என்றார்.

அவர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக எச்சரித்தார், ஒரு விஞ்ஞானி ஆவதைப் போலவே சமையலறையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

”நடு யுகத்திற்கு வருவோம். அது மிகவும் கடினமான காலம்... முழு நாடும் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருக்கிறது. கோயில்கள் உடைக்கப்பட்டன, பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டன, பெண்கள் ஆபத்தில் இருந்தனர். லட்சக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டு சர்வதேச சந்தையில் விற்கப்பட்டனர்.

அகமது ஷா அப்தாலி, முகமது கௌரி மற்றும் மஹ்மூத் கஜினி ஆகிய மூவரும் இங்கிருந்து பெண்களை அழைத்துச் சென்று விற்றனர். அது பெரும் அவமானம் நிறைந்த காலம். எனவே, நம் பெண்களைப் பாதுகாக்க, நமது சொந்த சமூகம் அவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது, என்று கோபால் கூறினார்.

ராமர் மற்றும் கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர், ஆனால் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் குழந்தை திருமணம் தொடங்கியது. இஸ்லாமிய படையெடுப்புகளுக்கு முன், இந்தியாவில் ‘சதி’ என்ற பாரம்பரியம் இல்லை.

Islamic invasion of India

தில்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால்

பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, குழந்தை திருமணங்கள் தொடங்கின.

நம் நாட்டில் ‘சதிபிரதா’ இல்லை. ஓருசில உதாரணங்கள் இருக்கலாம்… ஆனால் இஸ்லாமிய படையெடுப்பாளர்களின் வருகைக்குப் பிறகு, ஏராளமான பெண்கள் ‘சதி’யில் தள்ளப்பட்டனர்…

இப்படித்தான் பெண்கள் படிப்படியாகப் படிக்காதவர்களாகி, குழந்தைத் திருமணம் போன்ற மரபுகள் ஊடுருவின. விதவை மறுமணம் நிறுத்தப்பட்டது மற்றும் பெண்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது சமூகம் சீரழிந்த காலகட்டம்.

இந்த கட்டுப்பாடுகள் நம் சமூகத்தின் விதிகள் அல்ல, மாறாக "அவசர சூழ்நிலையை" சமாளிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.

எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பெண்கள் 12 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சமூகத்தில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தனர்.

13 ஆம் நூற்றாண்டில், கபீர் மற்றும் ரவிதாஸ் ஆகியோரை தனது சீடர்களாகக் கொண்டிருந்த சாந்த் ராமானந்த், வைஷ்ணவ சிந்தனையை பெரிய அளவில் பரப்பிய பல பெண் சீடர்களையும் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் சமூக சீர்திருத்தத்திற்கு பங்களித்து புனிதர்களாக மாறிய எத்தனையோ பெண்கள் இருந்தனர்.

நம் நாட்டுப் பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும்... நாம் முன்னேற வேண்டும்... நீங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள், விமானங்களில் பறப்பீர்கள், கப்பல்களை கையாளுங்கள், இஸ்ரோவுக்குச் செல்லுங்கள், விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆகுங்கள்... நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்... ஆனால் பெண்ணாக இருங்கள். ஒரு பெண் வீட்டின் மையமாக இருக்கிறாள், அதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் மதிப்பு கொடுப்பது பெண்தான்”.

ஒரு தொழிலை நிர்வகிப்பது போலவே சமையலறையை நிர்வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் கோபால் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நான் சுதா மூர்த்தியின் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன், அதில் அவர் வெளிநாட்டிற்குச் செல்லும்போது தனது உணவை பேக் செய்து எடுத்துச் செல்வதாகச் சொன்னார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ‘சமைப்பதுதான் எங்கள் வேலையா?’ என்று இன்றைக்கு பெண்கள் கேட்கிறார்கள். சமைப்பதன் மூலம் குழந்தைகள் உங்களுடன் இருப்பார்கள், அவர்கள் அன்பாக உணர்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சமையலறையை தானே நிர்வகித்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நேருஜி பிரதமராக இருந்தபோது, ​​இந்திரா காந்தி சமையலறையைக் கட்டுப்படுத்தி வந்தார்.

வீட்டின் சூழலை நிர்ணயிக்கும் பொறுப்பு பெண்களிடம் உள்ளது என்று கோபால் கூறினார்..

நவீன நாகரீகம் நிறைய கொடுத்துள்ளது, ஆனால் சில விஷயங்களையும் பறித்து விட்டது. பெருகிய முறையில் தனிமையாகி வருகிறோம். மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். மது அருந்துதல் அதிகரித்துள்ளது.

நாம் அமெரிக்கர் உட்கொள்ளும் மதுவின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாக உட்கொள்ளுகிறோம். இதற்கு யார் பொறுப்பு? நம் குடும்பத்தின் சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பது பெண்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.

பழங்கால இந்திய சமுதாயத்தில் பெண்களின் உயர்ந்த அந்தஸ்து பற்றி பேசிய கோபால், ரிக் வேதத்தில் 27 பெண்கள் துதிப்பாடல்களை வழங்கியுள்ளனர், என்றார்.

இந்தியாவில் பெண்களின் நிலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?, நம் பழமையான உரையைப் படியுங்கள். இது நமக்கு கற்பிக்கப்படவில்லை. நாம் நமது சொந்த வரலாற்றை மறந்து விடுகிறோம். இந்தியாவில் உள்ள திருமண முறை ஒரு பெண் துறவியால் வழங்கப்பட்டது. ஒரு பெண் மருமகளாக வரும்போது நம் கீர்த்தனைகளின்படி ராணி என்று அழைக்கப்படுகிறாள்.

திரௌபதி தன்னை அவமானப்படுத்திய அனைவரையும் அழிக்கும் ஊடகமாக மாறியதால் அனைத்து பெண்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தாள்.

பெண்களை தாயாக பார்க்கும் கொள்கை நம்மிடம் உள்ளது. ஏனென்றால் அது ஒரு பெண்ணின் மிகச்சிறந்த வடிவம். தெற்கில் ஆறு வயது சிறுமியைக் கூட ‘அம்மா’ என்று அழைப்பார்கள், என்று கிருஷ்ண கோபால் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment