ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத்,
சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.
பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார். அதற்கு பதிலளித்த நாங்கள், அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம்.
காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்" என்று கூறினோம்.
ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், "நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் பிரச்சார பிரமுகர் சுனில் அம்பேகர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், பகவத் இதுபோன்ற சந்திப்புகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு வழங்குகிறார் என்று சங்கத்தின் ஒரு வட்டாரம் கூறியது.
தொடந்து குரைஷி கூறுகையில், "அவரால் ர்க்கப்பட்டதாகக் கூறினார். அவர் விஷயங்களை (பகவத்) பொறுமையாக கேட்பவர், மிகவும் எளிமையாக வாழ்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், எளிமையான அறை, எளிமையான பொருட்களுடன் வசிக்கிறார் என்பது எங்களை மிகவும் கவர்ந்தது" என்றார்.
ஜமியத்-உலமா-இ-ஹிந்தின் தலைவர்களான அர்ஷத் மதானி மற்றும் மஹ்மூத் மதானி ஆகிய இரு தலைவர்களும் கடந்த காலங்களில் பகவத்தை சந்தித்திருந்தாலும், "உண்மையில் எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்ந்து தொடர்பில் இல்லை.
முஸ்லீம் சமூகத்தின் சார்பாக பகவத்தை சந்தித்த ஐவரும் ஒரு வருடத்திற்கு முன்பு கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார மேம்பாட்டுக்கான கூட்டணியை தொடங்குவதற்கு ஒன்று கூடினர். இது கல்வியில் குறிப்பாக மதரஸாக்களை நவீன கல்வியில் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருவதில் பணியாற்றி வருகிறது.
பகவத்தை அவர்கள் சந்தித்தபோது, உத்தரப்பிரதேசம் உத்தரவிட்ட மதரஸாக்களின் கணக்கெடுப்பு ஒரு பிரச்சினையாக இல்லை என்று சித்திக் கூறினார். "எனவே நாங்கள் அதை உயர்த்தவில்லை. இருப்பினும், இது நாங்கள் பணிபுரியும் ஒரு துறை என்பதால், மதரஸாக்கள் குறித்த கருத்து குறித்து நாங்கள் கவலை தெரிவித்தோம், மேலும் மதரஸாக்களுடன் (madrasas) தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் எங்களிடம் கூறினார் ”என்றார்.
சங்கத்தின் பல்வேறு அமைப்புகள் முஸ்லீம்களுக்கு எதிராக கருதப்படும் பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர் என்று கூறுகையில் பகவத்தும் இதே பிரச்சனைகளை முன்வைத்து பேசினார்.
செப்டம்பர் 2018இல், டெல்லியில் மூன்று நாள் விரிவுரைத் தொடரின் போது, பகவத், இந்தியாவில் முஸ்லீம்கள் இல்லாமல் "இந்து ராஷ்டிரம்" இருக்க முடியாது என்று கூறினார். இந்துத்துவா வேற்றுமையில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உள்ளடக்கியது. "இந்தியாவில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரின் அடிப்படை சிந்தனையாகும்" என்று கூறினார்.
இருப்பினும், மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டின் ஆர்எஸ்எஸ்-யின் ஆண்டு அறிக்கை, "அரசியலமைப்பு மற்றும் மத சுதந்திரம்" என்ற போர்வையில் வளர்ந்து வரும் மத வெறியைப் பற்றி பேசுகிறது. சிறுபான்மையினரை குறிக்கும் வகையில், "அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் இருப்பதற்கும், அதற்கான திட்டங்கள்" பற்றியும் அது பேசியது.
முன்னதாக, சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஞானவாபி மசூதி தொடர்பான தனது முதல் கருத்தில், பகவத், ஒவ்வொரு மசூதியிலும் (ஹர் மஸ்ஜித் மே ஷிவ்லிங் கியூன் தேக்னா) சிவலிங்கத்தைத் தேட வேண்டியதன் அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் இது தொடர்பாக எந்த இயக்கம், பேரணி, போராட்டம் நடத்தாது என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.