Advertisment

பயிற்சி முகாம் நேரத்தைக் குறைக்கும் ஆர்.எஸ்.எஸ்: மூங்கில் குச்சியை மாற்றுவது பற்றியும் திட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பல தசாப்தங்கள் பழமையான பயிற்சி முறையை மற்ற முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RSS set to revamp, reduce training camp time Tamil News

தற்போது, ​​முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முகாம்கள் தலா 20 நாட்கள் நடத்தப்பட்டு, மூன்றாம் ஆண்டு பயிற்சி, நாக்பூரில் மட்டும், ஆண்டுதோறும் 25 நாட்கள் நடக்கிறது.

இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), அடுத்த ஆண்டு விஜயதசமியுடன் தனது நூற்றாண்டு விழாவிற்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அதன் பல தசாப்தங்கள் பழமையான பயிற்சி முறையை மற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி, அதிகாரிகள் பயிற்சி முகாம் (OTC) அல்லது சங்க் ஷிக்ஷா வர்க் மாற்றி அமைக்க உள்ளது. இதேபோல், அவர்கள் கையில் வைத்திருக்கும் மூங்கில் குச்சியையும் (டண்ட் - dand) மாற்றியமைக்க வேண்டுமா என்பது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

சங்கச் சீருடையின் பகுதியாக இல்லாவிட்டாலும், அந்த மூங்கில் குச்சி சங்கத்தின் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. ஜூலை 13 முதல் 15 வரை ஊட்டியில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டதாகவும், பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் கேந்திரிய காரியகாரி மண்டல் கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

தற்போது, ​​முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முகாம்கள் தலா 20 நாட்கள் நடத்தப்பட்டு, மூன்றாம் ஆண்டு பயிற்சி, நாக்பூரில் மட்டும், ஆண்டுதோறும் 25 நாட்கள் நடக்கிறது. முதல் ஆண்டு முகாம்களை 15 நாட்களாகக் குறைத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு முகாம்களை 20 நாட்களுக்கு நடத்துவதே பெரும்பான்மையான ஆலோசனை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதலாம் ஆண்டு முகாம்களை 15 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு முகாம்கள் மேலும் குறைக்கப்படலாம் என்றும் மற்றொரு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. முதல் ஆண்டு முகாம் இப்போது சங்க் ஷிக்ஷா வர்க் என்றும், மற்ற ஆண்டுகளுக்கு காரியகர்த்தா விகாஸ் ஷிவிர் என்றும் பெயரிடப்பட உள்ளது.

பயிற்சிக் கருவியாக இந்த முகாம்களில் பயன்படுத்தப்படும் மூங்கில் குச்சியின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே சிறிய மூங்கில் குச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது யஷ்டி (ஒரு சமஸ்கிருத சொல்) என்று அழைக்கப்படுகிறது. இது பாரம்பரியமான 5.3 அடிக்கு எதிராக தோராயமாக 3 அடி நீளம் கொண்டது. மூங்கில் குச்சி அதன் சீருடையில் இல்லை என்பதால், ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவாக்களை மூங்கில் குச்சியுடன் அழைக்கும் போது, ​​அவர்கள் "டண்டுடன் சீருடையில்" வர வேண்டும் என்று சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்படுகின்றன. மேலும் சில குளிர்காலத்திலும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 20,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்ற முகாம்கள் நடத்தப்பட்டன.

ஊட்டி பிரசாரக் கூட்டத்தில் இருந்து திரும்பிய பல பிரதிநிதிகளுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் உரையாடுகையில், “கோட்பாட்டளவில், முகாம்களின் காலம் மற்றும் பயிற்சியின் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். சில வழிமுறைகள் மற்றும் புதிய அமைப்பு இன்னும் விவாதிக்கப்படுகிறது. காரியகாரி மண்டல் கூட்டத்தில் புதிய முறை அறிவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் முடிவு செயல்படுத்தப்படும்.

ஊட்டி கூட்டத்தில் பங்கேற்ற மூத்த பிரசாரக் ஒருவர் கூறுகையில், "சுருக்கமாக" இந்த முகாம்களின் கால அளவைக் குறைப்பதுடன், "பயிற்சியின் உடல் உடற்பயிற்சி கூறு குறைக்கப்படும் மற்றும் பௌதிக் (அறிவுசார் பயிற்சி) கூறு அதிகரிக்கப்படும்" என்றார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Rss Rss Mohan Bhagwat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment