வருங்கால இந்தியா : ஆர்.எஸ்.எஸ் தலைமையில் நடைபெறும் மூன்று நாள் கருத்தரங்கம்

கருத்தரங்கத்திற்கு தலைமை வகுத்து பேச இருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்

By: Updated: August 27, 2018, 04:07:33 PM

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  அகில இந்திய பிரச்சார தலைவர் அருண் குமார் இன்று பத்திரிக்கையாளார்களை சந்தித்தார். அவர் பத்திரிக்கையாளர்களிடம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றி பேசினார்.

ஆர்.எஸ்.எஸ்  அமைப்பு கருத்தரங்கம்

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் மாதம் 17 முதல் 19 தேதிகள் வரை ஆர்.எஸ்.எஸ் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற இருக்கிறது.  ஆர்,எஸ்.எஸ் பார்வையில் வருங்கால இந்தியா என்ற பெயரில் நடக்க இருக்கும் கருத்தரங்கத்திற்கு தலைமை வகுத்து பேச இருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் என்றும் கூறினார் அருண் குமார்.

அந்த கருத்தரங்கில் தேசிய அரசியலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசப்படும் என்று தெரிய வந்துள்ளது.

To read this article in English 

ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம்

ராகுல் காந்தி, சமீபத்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அது குறித்து கருத்து தெரிவித்தார் அருண் குமார்.

இந்தியா பற்றி புரிந்து கொள்ள இயலாதவர்களால் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புப் பற்றி புரிந்து கொள்ள முடியாது. இது போன்ற வார்த்தை ப்ரயோகங்களை ராகுல் தவிர்த்திருக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அரபு தேசத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளால் தான் தீவிரவாதம், இஸ்லாமிக் ஸ்டேட் போன்ற அமைப்புகள் உருவாகி உள்ளன. இது போன்ற ஒரு அமைப்பை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஒப்பிட்டு பேசுவது முற்றிலும் தவறானது என்று அவர் குறிப்பிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rss will organise a three day lecture series in the national capital from september 17 to

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X