Deeptiman Tiwary
நீட் தேர்வுத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் பின்னணியில், ஐ.ஐ.டி தேர்வுகளைப் போன்று மத்தியப் போட்டித் தேர்வுகளை மறுசீரமைப்பதைத் தவிர திறந்த புத்தகத் தேர்வுகள் பற்றிய யோசனையை அரசாங்கம் ஆராய்ந்து கேள்வி வங்கிகளைத் தயாரிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கல்விப் பிரிவான வித்யா பாரதி பரிந்துரைத்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
தேசிய தேர்வு முகமையின் (NTA) செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவிற்கு இந்த பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
“தேர்வு நடத்தும் முறை மாற வேண்டும். தேர்வுகள் தேர்வரின் நுண்ணறிவு அளவு, திறமை மற்றும் மனோபாவத்தை சோதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது நடந்தவுடன், வினாத்தாள் கசிவு பற்றிய கேள்வியே இருக்காது. மனப்பாடம் செய்து எழுத வேண்டும் என்றபோதுதான், இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தொடங்குகின்றன,” என்று வித்யா பாரதியின் அகில் பாரதிய ஆதிக்ஷ் டி ராம்க்ருஷன் ராவ் கூறினார்.
ஐ.ஐ.டி தேர்வு முறைக்கு ஆதரவாக பேசிய ராமக்ருஷ்ன் ராவ், “நீங்கள் ஐ.க்யூ (IQ) அளவை சோதிக்கும் போது... ஐ.ஐ.டிகள் நடத்தும் தேர்வுகளை பாருங்கள்... முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை, ஏனெனில் தேர்வு முறை வேறுபட்டது. தேசிய தேர்வு முகமை பல தேர்வுகளை நடத்துகிறது. தேர்வு முறை மாறியவுடன் விஷயங்கள் சிறப்பாக மாறும்,” என்று கூறினார்.
கேள்வி வங்கிகளை உருவாக்குவது மற்றும் திறந்த புத்தகத் தேர்வுகள் பற்றிய யோசனைகளை ஆராய்வது தவிர, இந்த பரிந்துரைகள் ராதாகிருஷ்ணன் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்பின் மூத்த அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு (NEET-UG) மற்றும் யூ.ஜி.சி-நெட் (UGC-NET) தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் ஜூன் 22 அன்று அறிவித்தது.
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு துரதிர்ஷ்டவசமானது. நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கக்கூடாது, ஆனால் இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற சம்பவங்கள் தகுதியை பின்னுக்குத் தள்ளாமல் இருக்க, எங்கள் பள்ளிகள் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்வோம், என்று ராம்கிருஷ்ன் ராவ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“