Advertisment

முகநூல் விளம்பரத்தில் அள்ளிக் கொட்டிய பாஜக: காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு அடுத்த இடங்கள்

பாஜகவின் விளம்பர செலவையும் (4.61 கோடி) சேர்த்துக் கூட்டினால், மொத்த விளம்பர செலவு ரூ .10.17 கோடியாகும்.

author-image
WebDesk
New Update
முகநூல் விளம்பரத்தில் அள்ளிக் கொட்டிய பாஜக: காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு அடுத்த இடங்கள்

கடந்த 18 மாதங்களாக முகநூலில் (பேஸ்புக்), "சமூகப் பிரச்சினைகள், தேர்தல்கள் மற்றும் அரசியல்" என்ற  விளம்பரப் பிரிவில் மிகப்பெரிய விளம்பரதாரராக ஆளும் பாஜக விளங்கி வருகிறது. 2019 ஆண்டு பிப்ரவரி முதல் ஆகஸ்ட் 24 தேதி வரை, பாஜக ரூ .4.61 கோடிக்கு மேல் செலவழித்தது. இந்தியாவின், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இதே  காலகட்டத்தில் ரூ .1.84 கோடி வரை செலவு செய்துள்ளது.

Advertisment

இந்த பிரிவில், முதல் 10 அதிகம் செலவு செய்தவர்கள் பட்டியலில், பாஜகவுடன் இணைக்கப்பட்டுள்ள இதர நான்கு விளம்பரதாரர்கள் உள்ளனர். இதில் மூன்று வலைப்பக்கங்கள் பாஜக- வின் தேசிய தலைமையகத்தின் முகவரியைப் பகிர்ந்து கொண்டதாக  டிராக்கர் தெரிவித்துள்ளது.

இந்த நான்கில், ‘மோடிக்கான எனது முதல் வாக்கு’ (ரூ .1.39 கோடி)  ‘பாரத் கே மான் கி பாத்’ (ரூ .2.24 கோடி) ஆகிய இரண்டும் சமூக வலைத்தளப் பக்கங்களாக உள்ளன (community pages) நேஷன் வித் நமோ' (ரூ. 1.28 கோடி) என்ற பக்கம் செய்தி மற்றும் ஊடக வலைத்தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது ; Security and Intelligence Services (SIS) நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான ஆர் கே சின்ஹாவுடன் ஒரு பக்கம் ( ரூ. 0.65 கோடி) இணைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் விளம்பர செலவையும் (4.61 கோடி) சேர்த்துக் கூட்டினால், மொத்த விளம்பர செலவு ரூ .10.17 கோடியாகும். இது, இந்த பிரிவில், முதல் 10 பேர் செலவு செய்ததில் (ரூ. 15.81 கோடி) 64 சதவீதமாக உள்ளது. 2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற  மக்களவைத் தேர்தலும், இந்த கால கட்டத்தில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த, 17வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது .

முதல் 10 இடங்களுக்கு வந்த மற்றொரு பிரதான அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி (69 லட்சம்) விளங்குகிறது.

கிடைத்த தரவுகளின் படி, " முகநூலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, இந்தியாவில் இந்த குறிப்பிட்ட விளம்பர பிரிவில் மட்டும் ரூ.59.65 கோடி செலவு செய்யப்பட்டன. முகநூல் செயலி மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றோடு  நின்றுவிடமால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசேஞ்சர்  (Facebook Messenger),  ஆடியன்ஸ் நெட்வொர்க் ( Audience Network ) போன்ற தளங்களிலும் விளம்பரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ், "வணிக ரீதியான காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு, முகநூல் இந்தியாவின் உயர்மட்ட பொதுக்கொள்கை அதிகாரி, பாஜகவின் வெறுப்பு கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்தார் " என்று செய்தி வெளியிட்டது.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," முகநூல் நிறுவனம் இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் பதிவிட்டிருந்த கருத்துகளை தடுத்து நிறுத்தவில்லை.  உதாரணமாக, தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ டி ராஜா சிங் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்ட  கருத்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. முன்னாள் மற்றும் இந்நால் முகநூல் ஊழியர்கள், முகநூல் பொதுக்கொள்கை தலைவர் அன்கி தாசின் தலையீடு ஆளும் கட்சிக்கு ஆதரவான வகையில் இருந்தது" என்று  தெரிவித்தது.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, தகவல் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர், முகநூல் நிறுவன அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு  கடிதம் எழுதினார்.

'மோடிக்கான எனது முதல் வாக்கு' மற்றும் 'பாரத் கே மான் கி பாத்' என்ற சமூக பக்கங்கள் 2019 ஜனவரியிலும், 'நேஷன் வித் நமோ' 2013 ஜூன் மாதத்திலும் உருவாக்கப்பட்டன. இந்த மூன்று வலைப்பக்கங்களிலும்,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்த கருத்துக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இருப்பினும், பாஜகவுடன் நேரடியாக தொடர்புடையவை என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

விளம்பரதாரர்கள் பற்றிய தகவலின் கீழ், மூவரும் தங்கள் முகவரியை “6 - ஏ,  பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா  மார்க்,  மிண்டோ பிரிட்ஜ் காலனி, பரகாம்பா சாலை, புது தில்லி 110002” என்று  பதிவிட்டுள்ளனர். இது, பாஜகவின் தேசிய தலைமையகத்தின் முகவரியாகும்.

இந்த குறிப்பிட்ட விளம்பரப் பிரிவில் முதல் பத்து இடங்களில் உள்ள மற்ற விளம்பரதாரர்களில், செய்தி தளமான டெய்லிஹண்ட் ( 1கோடிக்கும் மேல்) ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (ரூ .86.43 லட்சம்) போன்ற நிறுவனங்களும் உள்ளன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment