மத்திய டெல்லியில் இருந்து வீட்டை விட்டு ஓடிப்போன 17 வயது சிறுவன் சில நாட்களுக்குப் பிறகு, கிருஷ்ணகிரியில் ஒரு கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுவன் தனது பதினோராம் வகுப்பு தேர்வை எழுத பயந்து வீட்டை விட்டு ஓடியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மத்திய டெல்லியில் உள்ள ஒரு "புகழ்பெற்ற பள்ளியில்" படித்து வரும் அந்த இளைஞர் எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
தான் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், என்னைத் தேட வேண்டாம் என்றும் சிறுவனிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததை அடுத்து சிறுவனின் குடும்பத்தினர் பிப்ரவரி 21 அன்று அவரைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
சிறுவனின் தந்தை தனது மகன் தனது நன்றாக படிக்கவில்லை என்றும், 11 ஆம் வகுப்பு இறுதித் தேர்வை எழுத விரும்பவில்லை என்றும் போலீசாரிடம் கூறினார்.
"சிறுவன் சுதந்திரமாக இருக்க விரும்பியதாகவும் சொந்தமாக பணம் சம்பாதிக்க விரும்பியதாகவும் பள்ளியில் படிக்கும் போது பிட்காயினில் முதலீடு செய்ய முயற்சித்ததாகவும் ஆனால் அதிக வெற்றி கிடைக்கவில்லை" என்று ஒரு போலீசார் தெரிவித்தனர்.
தனது குடும்பத்தின் ஏழ்மையான நிலையால் அந்த பள்ளியில் இருப்பது இருந்ததாகவும், இதுவே வீட்டை விட்டு ஓடத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் கூற்றுப்படி, டெல்லியில் இருந்து சிறுவன் பெங்களூருக்கு ரயிலில் சென்று அங்கு கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரத்தைப் பார்த்ததாகவும் பின் அந்த இடம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் இருந்ததால் வேறொரு ரயிலை பிடித்து அங்கு சென்று கட்டிட வேலை செய்யத் தொடங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சிறுவனைக் கண்டுபிடிக்க ஏ.சி.பி அருண் சவுத்ரியின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மனோஜ் தஹியா, ஏ.எஸ்.ஐ கோபால் கிருஷ்ணன் மற்றும் கான்ஸ்டபிள் தரம்ராஜ் ஆகியோர் அடங்கிய மனித கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டது. அவரது தொலைபேசியின் இருப்பிடத்தைப் பயன்படுத்தி, சிறுவன் கிருஷ்ணகிரியில் இருப்பது கண்டறியப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.