Advertisment

இந்திய மாணவர்களுக்கு கடைசி நேர கட்டளை... போர்முனை டாப் 5 நிகழ்வுகள்!

உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்; பெலாரஸ் எல்லையில் 2 கட்ட பேச்சு வார்த்தை; உக்ரைனில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கே

author-image
WebDesk
New Update
இந்திய மாணவர்களுக்கு கடைசி நேர கட்டளை... போர்முனை டாப் 5 நிகழ்வுகள்!

Leave Kharkiv immediately: Indian embassy in Ukraine tells its citizens amid worsening situation: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமை ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது. அதன்படி இந்தியர்கள் அனைவரும் கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்ய தரப்பில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்திய தூதரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களில், "தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, உக்ரைனின் மோசமான சூழ்நிலையின் காரணமாக அவர்கள் உடனடியாக கார்கிவ் நகரை விட்டு வெளியேற வேண்டும். பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய இடங்களுக்கு விரைவில் செல்ல வேண்டும். மேலும், "எல்லா சூழ்நிலைகளிலும், இந்தியர்கள் இன்று 1800 மணி நேரத்திற்குள் (உக்ரேனிய நேரம்) இந்த பகுதிகளை அடைய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

கார்கிவில் 21 வயதான இந்திய மருத்துவ மாணவர் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு சமீபத்திய ஆலோசனை வந்தது. ரஷ்ய படைகளின் முக்கிய இலக்கான கார்கிவ் நகரம், கடந்த இரண்டு நாட்களாக தீவிர ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, கடந்த ஒரு நாளில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கார்கிவ் மீதான தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்தது, மாலையில் உக்ரேனிய தரப்புடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியது. உக்ரேனிய அரசு அவசர சேவையின்படி, பிராந்திய போலீஸ் மற்றும் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வியாழன் அன்று உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் மற்றும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" ஏற்படுத்தும் என்று மற்ற நாடுகளை எச்சரித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள குடிமக்களைப் பாதுகாக்க இந்தத் தாக்குதல் தேவை என்று அவர் கூறியிருந்தார். இது ஒரு படையெடுப்பை நியாயப்படுத்த அவர் பொய்யாகச் செய்வார் என்று அமெரிக்கா கணித்திருந்தது.

இன்றைய முக்கிய உக்ரைன் நிகழ்வுகள் இங்கே.

உக்ரைனின் கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா

கெர்சன் நகரை கைப்பற்றியிருப்பதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் இருக்கின்ற இந்த நகரை கைப்பற்றியிருப்பதன் மூலம் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது.

உலக தடகள போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை

சர்வதேச தடகள போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க உலக தடகள அமைப்பு தடை விதித்துள்ளது. முன்னதாக, டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா, அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: என் சகோதரரின் உடலை விட, மற்ற மாணவர்களை பத்திரமாக மீட்டு வாருங்கள்; உக்ரைனில் உயிரிழந்த நவீனின் சகோதரர் உருக்கம்

இந்திய மாணவர் மரணம் குறித்து விசாரணை: ரஷ்ய தூதர்

இந்திய மாணவர் நவீன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் அறிவித்துள்ளார்.

பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

உக்ரைன் உடன் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே பெலாரசில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பெலாரஸ் – போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்

உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனr என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment