Ukraine Russia War Update : கடந்த சில மாதங்களாக உக்ரைன் எல்லையில் ஆயுதம் மற்றும் படை வீரர்களை குவித்த ரஷ்யா போருக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதால் பெரிய பதற்றம் நீடித்தது. இதனால் போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இன்று அதிகாலை ரஷ்யா திடீரென உக்ரைனில் தாக்குதலை தொடங்கியது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஏவுகனை தாக்குதல் காரணமாக உக்ரைன் ராணுவ வீரர்கள் 100-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த போர் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள இந்தியாவை சேர்ந்த அகன்ஷா கட்டியார், உக்ரைன் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், கட்டங்கள் குலுங்கியது தொலைதூர வெடிப்பு சத்தத்தால் திடுக்கிட்டு எழுந்ததாக கூறியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களில் பெரு்பாலானோர் மருத்துவம் பயின்று வரும் நிலையில், இந்த போர் பதற்றம் காரணமாக தாங்கள் எப்படி நாடு திரும்ப போகிறோம் என்ற பீதியில் உள்ளனர். அவர்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய தூதரக அதிகாரிகளிடம் கெஞ்சி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து தொலைபேசியில் தெரிவித்த அகான்க்ஷா “நான் அதிகாலை 3 மணியளவில் தூங்க சென்றேன். ஆனால் அதிகாலை 4 மணியளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டது. ஜன்னல் ஓரம் அதிர்வதால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்த மோஷன் சென்சார்கள் திடீரென செயலிழந்தன. என்று கூறியுள்ளார்.
கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவரான அருண், ரஷ்யாவுடனான உக்ரைனின் எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கார்கிவில் இருப்பதாகவும், "அவர்கள் ஒருவேளை எல்லையில் இருந்து மேலும் முன்னேற முயற்சித்து வருவதால் பதற்றம் அதிகரித்துளளது. இந்தியாவுக்கான திட்டமிடப்பட்ட விமானங்களைப் பிடிக்க நேற்று இரவு கிய்வ் விமான நிலையத்திற்குச் சென்ற எனது நண்பர்கள் சிலரும் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் பேருந்துகள் நகரவில்லை, மார்ச் 7 ஆம் தேதி திரும்புவதற்கான டிக்கெட் திட்டமிடப்பட்டுள்ளதாக அருண் கூறியுள்ளா.
மேலும் கார்கிவில் இருந்து தலைநகர் கீவ் நகருக்குச் செல்ல சுமார் ஏழு மணி நேரம் ஆகும். “டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் இப்போது நான் திரும்புவது நிச்சயமற்றதாக உள்ளது.
எனக்குத் தெரிந்தவரை விமானங்கள் செல்லும் வான்வெளி மூடப்பட்டுள்ளது” இந்தியாவின் சிறப்பு விமானம், மற்றொரு பகுதி இந்தியர்களை அழைத்து வந்திருக்கும், ஆனால் "சிவில் விமானப் போக்குவரத்துக்கு அபாயம் நீடிப்பதால், வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் நடுவழியில் திரும்ப வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார். இந்தியத் தூதரக அதிகாரிகளும், மருத்துவப் கல்லூரியில் சேர்க்கைக்கு உதவிய உள்ளூர் முகவர்களும் மாணவர்களை பீதியடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எப்படி நாம் பீதி அடையாமல் இருக்க முடியும்? இங்கே பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. நானும் ஒரு பெர்த்தை முன்பதிவு செய்ய முயற்சித்தேன் ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. டிக்கெட் விலைகள் அனைத்தும் 60,000 ரூபாய்க்கு மேல் இருந்தது,” கான்பூரைச் சேர்ந்த அகன்க்ஷா, கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதல்ல என்று மேலம் கான்பூரைச் சேர்ந்த அர்பித் கட்டியார்கூறியுள்ளார். மேலும் "எங்கள் சேர்க்கை மற்றும் தங்குவதற்கு ஏற்பாடு செய்த எங்கள் உள்ளூர் முகவர் கூட நாங்கள் பீதி அடைய வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் வெடிகுண்டுகள் வீசப்படும்போது ஒருவர் எப்படி பீதி அடையாமல் இருக்க முடியும்? எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தற்போது வான்வெளியும் தடை செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். நான் திரும்ப முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று அர்பித் தெரிவித்துள்ளார்.
கியேவில் உள்ள இந்தியத் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்தியர்களை "உங்கள் வீடுகள், தங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் அல்லது போக்குவரத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும்" அறிவுறுத்தி வருகிறது. கெய்வ் நகருக்குப் பயணம் செய்பவர்கள் தங்களது நகரங்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் குறிப்பாக மேற்கு எல்லையோர நாடுகளில் உள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ககான்பூரில் உள்ள அருண் குடும்பத்தினர், பிப்ரவரி மத்தியில் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் இந்தியர்களை வலியுறுத்தியதாகவும், ஆனால், "மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் தாமதமானது" என்றும் தெரிவித்துள்ளனா.
தூதரகம் எங்களை சரியான நேரத்தில் வெளியேற்றும் என்று நாங்கள் உண்மையில் நினைத்தோம். இந்திய பணியின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் நாங்கள் இறங்காமல் இருப்பதை உறுதி செய்யும் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்புகள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம் என்று அருண் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.