சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யை தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
போர் ஒரு மாதத்தை தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் மீது மனிதாபிமான வரைவு தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது.ஆனால், அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
ஷ்யாவின் தீர்மானத்திற்கு தேவையான 9 வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால், அவை நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்தை புறக்கணித்தது மூலம், இந்தியா மாஸ்கோவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை என்பதை காட்டுகிறது.
அதே சமயம், முன்பு உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகள் தலைமையிலான தீர்மானங்களையும் இந்தியா புறக்கணித்தது. எனவே, வியாழன் நடைபெற்ற வாக்களிப்பு மூலம், இந்த பிரச்சினையில் இன்னும் நடுநிலையை இந்தியா கையாள்வதை காணமுடிகிறது.
பின்னர், பிரஞ்சு மற்றும் மெக்சிகன்களால் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் (UNGA) முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு மீண்டும் இந்தியா வாக்களிக்கவில்லை. அதற்கு ஆதரவாக 140 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும், 38 வாக்களிக்கவில்லை எனவும பதிவு செய்யப்பட்டது. இந்தத் தீர்மானம் ரஷ்யாவைக் கண்டிப்பதில் "வலுவானதாக" இருந்தது.
கடந்த வாரம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குவாட் அமைப்பு நாடுகளில் ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து நடவடிக்கையில் ஈடுபடுவதில் இந்தியா சற்று நடுங்குகிறது என தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்காவுடன் மற்ற குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை ரஷ்யாவை எதிர்க்க தயாராக உள்ளன.
மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வில் தான், ரஷ்யா முன்வைத்த தீர்மானம் குறித்த விவாதத்தின் போது இருந்தார். சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷ்யாவுடன் சீனா வாக்களித்தது. இந்தியா மற்றும் மீதமுள்ள UNSC உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்காத மற்ற உறுப்பினர்களைப் போல், இதுகுறித்து இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil