ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இன்று மாலை டெல்லி வர இருக்கும் விளாடிமிர் புதின் இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான 19வது மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை
நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் விளாடிமிர் புதின். இரண்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை முடிந்த பிறகு புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருபதிற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார் விளாடிமிர்.
அதற்கு பின்னர் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா-ரஷ்யா வர்த்தக மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். இங்கிருந்து மாஸ்கோவிற்கு திரும்பிச் செல்லும் முன் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் ராஷ்ட்ரபதி பவனில் நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.
கடந்த முறை நடந்த மாநாட்டிற்கு மோடி ரஷ்யா சென்றார். இந்த வருடம் மே மாதம் ரஷ்யாவில் இருக்கும் கடற்கரை நகரமான சோச்சிக்கு மோடி பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது.