Advertisment

ராஜபக்ஷே வெற்றிக்குப் பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜபக்ஷே வெற்றிக்குப் பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

novel coronavirus COVID 19 latest updates

கோத்தபய ராஜபக்ஷ இலங்கை தேசத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கொழும்புக்கு வருகை தரும் முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற பெருமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பெறவுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை அவர் இலங்கைக்கு செல்கிறார்.

Advertisment

இதில் சுவாரஸ்யம் என்னவெனில், ஜெய்சங்கர் 90 களில் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் (ஐ.பி.கே.எஃப்) முதல் செயலாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோத்தபய ராஜபக்ஷ கூறுகையில், சீனா ஒரு "வர்த்தக பங்காளியாக" இருக்கும்போது, இந்தியா "எங்கள் உறவினராக" உள்ளது என்றார்.

அவரது வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை ஆழமாக்குவதை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

17, 2019

"நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்" என்று மோடி ட்வீட் செய்திருந்தார்.

பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு பதிலளித்த ராஜபக்ஷ அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவை என்று கூறினார்.

"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். நமது இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன, நமது நட்பை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் நான் எதிர்நோக்குகிறேன்," என்று ராஜபக்ஷ பதில் அளித்திருந்தார்.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருகை தருமாறு திரு ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது," என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

கோதபயாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "தற்போதைய அரசாங்கத்துடன், இந்தியா தனது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று எண்ணியது. ஆனால் அது இலங்கையின் நலன்களைப் பாதுகாக்கத் தவறியது, இந்தியாவுக்காக எதுவும் செய்யவில்லை. இலங்கையில் ஒரு வலுவான ஜனாதிபதி தனது சொந்த நாட்டின் சுதந்திரத்தையும் சுயாட்சியையும் பாதுகாக்கும் அதே வேளையில் இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருப்பதை உறுதி செய்வார்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment