Advertisment

இந்தியாவின் மத சுதந்திரம் மீது விமர்சனம்; அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை குழுக்களுக்கு விசா மறுப்பு

இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கண்டனம் செய்த அமெரிக்க காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும் அரசு சாரா ஆலோசனைக் குழுக்களுக்கு மத்திய அரசு விசா மறுத்துள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 1ம் தேதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பை எழுப்பினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் மத சுதந்திரம் மீது விமர்சனம்; அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை குழுக்களுக்கு விசா மறுப்பு

Shubhajit Roy

Advertisment

இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து கண்டனம் செய்த அமெரிக்க காங்கிரசுக்கு ஆலோசனை வழங்கும் அரசு சாரா ஆலோசனைக் குழுக்களுக்கு மத்திய அரசு விசா மறுத்துள்ளது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 1ம் தேதி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச மத சுதந்திரம் குறித்த அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பை எழுப்பினார்.

ஏப்ரல் மாதத்தில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்தியாவை "குறிப்பிட்ட கவலை உள்ள நாடு" என்று நியமிக்க பரிந்துரைத்தது. 2004ம் ஆண்டுக்குப் பிறகு இப்படி முதல் தடவையாக பரிந்துரை செய்தது. 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இதேபோல பரிந்துரை வந்தபோது யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் இதே கோரிக்கையை முன்வைத்தது. யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-இன் வருடாந்திர அறிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை 2 முறை குறிப்பிட்டுள்ளது. ஒருமுறை அவர் குடியேறியவர்களை ஒழிக்க "கரையான்கள்" என்று குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எம்.பி துபேக்கு எழுதிய கடிதத்தில், “மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தர முயன்ற யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் குழுக்களுக்கு நாங்கள் விசா மறுத்துள்ளோம். ஏனெனில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் போன்ற ஒரு வெளிநாட்டு நிறுவனம் புகார் கூறி இந்திய குடிமக்களின் மாநில அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகள் குறித்து உச்சரிப்பதை நாங்கள் பாக்கவில்லை” என்று குறிபிட்டுள்ளார்.

மேலும், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-இன் அறிக்கைகளை தவறானது மற்றும் தேவையற்றது என்று வெளிவிவாகரத்துறை முன்பு நிராகரித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்தியா நமது இறையாண்மை மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விஷயங்களில் எந்தவொரு வெளிப்புற தலையீடும் அல்லது அறிவிப்பையும் ஏற்காது” என்று அவர் கூறினார்.

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் ஒரு கடுமையான கீழ்நோக்கி காணப்பட்டதாகக் கூறியது. மத சிறுபான்மையினர் 2019-ல் அதிகரித்து வரும் தாக்குதலின் கீழ், அதிகரிக்கும் உயரும் இஸ்லாமியோஃபோபியா பற்றி பேசியுள்ளது. அது சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, முறையாக, நடந்துகொண்டிருக்கும் மற்றும் மிக மோசமான மத சுதந்திர மீறல்களில் ஈடுபடுவதற்கும் பொறுத்துக்கொள்வதிலும் குறிப்பிட்ட கவலை உள்ள நாடுகள் என பாகிஸ்தான், வட கொரியா, சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றுடன் இந்தியாவை "குறிப்பிட்ட கவலை உள்ள நாடாக வரிசைப்படுத்தியுள்ளது.

இது சி.ஏ.ஏ - என்.ஆர்.சி பிரச்சினை, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டியது. சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் நகர்வுகள் ஒரு தேசிய என்.ஆர்.சி-ஐ நோக்கிய முதல் படிகள் என்று யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கூறியது.

குறிப்பிட்ட மத சுதந்திர மீறல்களை மேற்கோள் காட்டி, “அத்தகைய மீறல்களில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்களை முடக்குதல் அல்லது அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் மத சுதந்திரத்தை கடுமையாக மீறுவதற்கு பொறுப்பான இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது இலக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க” யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் பரிந்துரைத்தது.

இந்த அறிக்கை வெளிவந்த நேரத்தில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் நாட்டின் பக்கச்சார்பான மற்றும் உள்நோக்கமுடைய கருத்துக்கள் புதிது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது. ஆனால், இந்த சந்தர்ப்பத்தில், அதன் தவறான விளக்கம் புதிய நிலைகளை எட்டியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India America S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment