கிராமங்களை தத்தெடுப்பதில் தொய்வு காட்டும் எம்.பிக்கள்… SAGY திட்டம் குறித்து ஒரு பார்வை!

அக்டோபர் மாதம் 11ம் தேதி 2014ம் ஆண்டு துவங்கி இதுவரை 1753 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே நான்கு கட்டங்களில் இருந்தும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. 

By: Updated: January 2, 2020, 04:59:44 PM

Harikishan Sharma

Saansad Adarsh Gram Yojana model village scheme :  2014ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தன்னுடைய முதல் சுதந்திர தினவிழா உரையின் போது, செங்கோட்டையில் இருந்து சான்சத் ஆதர்ஷ் க்ராம் யோஜனா (Saansad Adarsh Gram Yojana (SAGY)) என்ற திட்டம் குறித்து பேசினார். மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள், தங்கள் தொகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை முன் மாதிரியாக கிரமமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

2016ம் ஆண்டில் 2 கிராமங்களாக அதனை உயர்த்தினார். 2019ம் ஆண்டில் குறைந்தது 5 கிராமங்களை மக்களவை உறுப்பினர்கள் தத்தெடுத்து முன்மாதிரியான கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்ற தத்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று ஒரு முன் மாதிரி கிராமங்கள் இருந்தால், சுற்றுப்புறத்தில் இருக்கும் இதர கிராமங்கள் தங்களின் கிராமங்களை மாற்ற முயற்சி செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

 Saansad Adarsh Gram Yojana model village scheme

ஐந்து வருடங்களில் இந்த SAGY திட்டம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்களை பார்த்தால், தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினர் இன்னும் இந்த திட்டத்தில் நான்காம் கட்டப்படி கிராம பஞ்சாயத்துகளை தத்தெடுக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்களோடு மொத்தம் 790 உறுப்பினர்கள் உள்ளனர். முஇதல் கட்டத்தில் 703 உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தை தத்தெடுத்துள்ளனர். ஆனால் இரண்டாம் கட்டத்தில் ஆக 497 ஆக குறைந்தது. மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டத்தில் மொத்தமாக எண்ணிக்கை குறைந்துள்ளது. அக்டோபர் மாதம் 11ம் தேதி 2014ம் ஆண்டு துவங்கி இதுவரை 1753 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே நான்கு கட்டங்களில் இருந்தும் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்திய கிராம மேம்பாட்டு துறையின் அதிகாரப்பூர்வ இணையதள தகவல்களின் படி நான்காம் கட்டத்தின் கீழ் 252 எம்.பிக்கள் மட்டுமே கிராம பஞ்சாயத்தினை தேர்வு செய்துள்ளனார். அதில் 208 எம்.பிக்கள் மக்களவை எம்.பிக்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் 44 பேர் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 545 ஆகும். அதில் 543 நபர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதர 2 நபர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். ராஜ்யசபையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். 12 நபர்கள் இதில் பரிந்துரையின் பேரில் செயல்படுபவர்கள். ஜனவரி 1ம் தேதி, 2020ம் ஆண்டின் கணக்குப்படி பார்த்தால் 240 ராஜ்யசபை உறுப்பினர்கள் உள்ளனர். 5 இடங்கள் காலியாக உள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒரு எம்.பி. ஒரு கிராமத்தினை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 17வது மக்களவை உருவாக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையிலும் மூன்றில் இரண்டு எம்.பிக்கள் கிராமங்களை இன்னும் தத்தெடுக்கவில்லை. இது குறித்து அந்த அமைச்சகத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த மாதம் பாராளுமன்ற ஸ்டேண்டிங் கமிட்டி “அரசின் அனைத்து திட்டங்களும் முறையாக கிராமங்களில் நிறைவேற்றப்படுகிறதா, தேவைக்கு தகுந்தாற் போல் விரைவாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொய்வான நடவடிக்கைகளால் இந்த திட்டம் மேலும் தாமதமாகிறது. எனவே ஊரக வளர்ச்சி துறை இது தொடர்பாக ஆராய்ந்து முடிவுகளை வேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Saansad adarsh gram yojana model village scheme not enough mps are adopting it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X