தாலிபான்களை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைத்த பாக்; அமைச்சர்கள் மாநாட்டை நிறுத்திய சார்க்

செப்டம்பர் 25 அன்று நேரில் நடத்த முன்மொழியப்பட்ட கூட்டம் ஐ.நாவின். 76வது பொதுசபை கூட்டத்தொடரின் போது நடைபெறாது என்று நேபாளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அன்று சார்க் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

Pakistan wants Taliban at table

 Shubhajit Roy 

Pakistan wants Taliban at table : நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் சார்க் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தானின் பங்கேற்பு காரணமாக அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஒரு வெற்று நாற்காலியை வைத்திருக்க வேண்டும் என்று கூறிக்கை விடுத்திருந்தது. மேலும் ஆப்கானிஸ்தானின் அஷ்ரஃப் கானி ஆட்சியில் இருந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருந்தால், ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் இருந்து ஒருவர் இந்த ஐ.நாவில் பிரதிநிதியாக பங்கேற்றிருக்க முடியும்.

தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்ததாக தெரியவந்துள்ளது. மற்ற உறுப்பு நாட்டினரால் இந்த கோரிக்கை கைவிடப்பட்டது. புதிய தாலிபான் ஆட்சி இன்னும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நற்மதிப்பினை பெற அந்த பிரதிநிதிகள் ஐ.நாவை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்த இந்த முடிவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் உடன்பாடு இல்லை. ஒருமித்த கருத்து இல்லாமை காரணமாக சார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இன்று வரை அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாததால், சார்க் அமைச்சரவையின் முறைசாரா கூட்டம் செப்டம்பர் 25 அன்று நேரில் நடத்த முன்மொழியப்பட்ட கூட்டம் ஐ.நாவின். 76வது பொதுசபை கூட்டத்தொடரின் போது நடைபெறாது என்று நேபாளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அன்று சார்க் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

சார்க் கூட்டமைப்பில் சேர்ந்த மிகவும் இளைய உறுப்பு நாடு ஆப்கானிஸ்தான் ஆகும். இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை மற்றும் பாகிஸ்தான் இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன. சார்க் செயலகம் காத்மாண்டுவில் ஜனவரி 17,1987ம் ஆண்டு நிறுவப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Saarc ministers meet called off as pakistan wants taliban at table

Next Story
அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீடு மீது தாக்குதல்; இந்து சேனாவைச் சேர்ந்த 5 பேர் கைதுAsaduddin Owaisis Delhi residence vandalised, Asaduddin Owaisis Delhi house attacked, 5 person arrested from Hindu Sena, ஏஐஎம்ஐஎம் கட்சி, ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி, அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீடு மீது தாக்குதல், இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது, AIMIM, Asaduddin Owaisis MP, Asaduddin Owaisis Delhi residence attack, 5 from Hindu Sena detained
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X