New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/sabarimala-1.jpg)
TN Live Updates :
Sabarimala darshan : மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை, நவம்பர் 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
TN Live Updates :
மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை, நவம்பர் 16-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும், இளம் பெண்கள் வர முயற்சி செய்வார்களா என்ற கேள்வி களுக்கு மத்தியில், பக்தர்களை வரவேற்க சபரிமலை தயாராகி வருகிறது.பம்பையில், மணல்பரப்பு சுத்தம் செய்யப்பட்டு, குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டு உள்ளது. பம்பை முதல், சன்னி தானம் வரையிலான நீலிமலை பாதையிலும், சுவாமி அய்யப்பன் ரோட்டிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாளிகைப்புறம் கோவிலுக்கு முன் உள்ள கட்டடம், முழுமையாக இடிக்கப்பட்டு, பக்தர்கள் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வெளிமாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் செங்கன்னுார் ரயில் நிலையத்தில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு போல, நிலக்கல் முதல், சன்னிதானம் வரை, அனைத்து பாதைகளையும், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது
நவம்பர் 16ம் தேதி, மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து கோவிலை வலம் வந்து, 18-ம் படி வழி சென்று ஆழிகுண்டத்தில் தீ வளர்ப்பார். அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர்நம்பூதிரி நடை திறந்து, தீபம் ஏற்றியதும் மண்டல காலம் தொடங்கும். அனைத்து நாட்களிலும், அதிகாலை, 5:30 முதல், பகல், 12:00 மணி வரை, நெய் அபிஷேகம் நடக்கும்.
தரிசன நேரம் மட்டுமல்லாமல், பிரசாதம் வாங்கவும், 'ஆன்லைன்' முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.