Sabarimala darshan 2022 Online Booking starts on https://sabarimalaonline.org : சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
சபரி மலை ஐய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடங்கத்திலும் 5-ந் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்த மாதங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால் கார்த்திகை மார்கழி மாதங்களை போல் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே கோவிலுக்கு வருவார்கள்.
அந்த வகையில் வைகாசி மாதத்திற்கான சிறப்பு பூஜை வரும் மே 15-ந் தேதி தொடங்குகிறது. மே 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த பூஜைக்கு சபரிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படும் வகையில் கோவில் நடை வரும் மே 14-ந் தேதி மாலை 5 மணி முதல் திறககப்பட உள்ளது. தொடர்ந்து மே 15 அதிகாலை முதல் மே 19 நள்ளிரவு வரை பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வகையில் சபரிமலை தேவஸ்தான நிர்வாகத்தால் நடத்தப்படும் https://sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த முன்பதிவு மே 5 (நேற்று) முதல் திறக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா 'நெகட்டீவ்' சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“