கோவில் நடை திறக்கும் முன் நான் உலகை விட்டுச் செல்கிறேன் : சபரிமலைக்காக குருசாமி தற்கொலை

உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி சமரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதியை கண்டித்து குருசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களாக சபரிமலைக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை கண்டிப்புடன் பின்பற்றி வந்தது சபரிமலை தேவசம். இதனை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில், எல்லா வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல அனுமதி உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து, நேற்று சபரிமலை நடை திறப்பு நடைபெற்றது. இந்த நடை திறப்பு முன்னிட்டு தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் நேற்று கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்கள் வருகையை எதிர்த்து கேரளாவில் ஆங்காங்கே கலவரம் வெடித்தது.

குருசாமி தற்கொலை :

இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 வருடங்களாக சபரிமலை கோவிலுக்கு செல்பவர் 80 வயதான ராமகிருஷ்ணன். இவர் பல்வேறு பக்தர்களை இருமுடி கட்டி கோவிலுக்கு இட்டுச்செல்லும் குருசாமி.

குருசாமி தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட குருசாமி

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியானதில் இருந்தே இவர் கடும் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று நடை திறந்து பெண்கள் வருவார்கள் என்பதை உணர்ந்த இவர், ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

சபரிமலைக்குள் பெண்கள் அனுமதி : கலவர பூமியாக மாறிய கேரளா… இது குறித்த செய்தியை படிக்க:

அவர் சடலத்தில் இருந்து ஒரு சிறிய தற்கொலை கடிதம் மீட்கப்பட்டது. அந்த தற்கொலை கடிதத்தில், ‘இது தான் என் கடைசி நாள். அந்த கோவில் நடைத் திறக்கும் முன், நான் இந்த உலகை விட்டு சென்றுவிடுகிறேன்.’ என்று எழுதியிருந்தது. இவரின் மரணம் குறித்த விசாரணையில் சமரிமலை கோவில்லுக்குள் பெண்கள் வருவதை ஏற்க முடியாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close