நாளை சபரிமலை கோவில் நடை திறப்பு... தொடரும் போராட்டங்கள்... லேட்டஸ்ட் அப்டேட்ஸ்...

மகர விளக்கு பூஜைக்காக நாளை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் : கேரளாவில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலிற்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை சபரிமலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு பார்வை.

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கூறி தீர்ப்பு அளித்தது.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமர்ந்த அந்த அமர்வில் நான்கு நீதிபதிகள் ஆர். எஃப். நாரிமான், ஏ.எம். கான்வில்கார், டி.ஒய். சந்திரசுத் கோவிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு கூறினர்.

இந்து மல்ஹோத்ராவின் மாறுபட்ட கருத்து மற்றும் தீர்ப்பு

மாறுபட்ட தீர்ப்பு : அந்த அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நீதி மையங்கள், மக்களின் இறை நம்பிக்கை மீது நீதி வழங்குதல் சரியன்று என்று கூறி மாறுபட்ட தீர்ப்பினை முன் வைத்தார்.

கேரள முதல்வர் பினராய் விஜயனின் நடவடிக்கை

கேரள முதல்வர் பினராய் விஜயன் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை, மறு பரிசீலனை ஏதுமின்றி பின்பற்ற இருப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்காக அண்டை மாநிலங்களில் இருந்து பெண் காவல்துறையினரை அழைக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கேரள மக்களின் எதிர்ப்பு

02/10/2018 : ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் உறுப்பினர்கள், கேரள மக்களை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு

கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரமேஷ் சென்னிதலா பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் தேவசம் போர்ட் உறுப்பினர்களை அழைத்து கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

மூன்று மறுபரீசிலனை மனுக்கள்

08/10/2018 : கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது கூடாது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய வேண்டும் என மூன்று மறு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு கொலை மிரட்டல்

12/10/2018 : கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில், பாஜக உறுப்பினர் மற்றும் மலையாள நடிகருமான கொல்லம் துளசி, கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டாக வெட்டி, ஒரு பகுதியை டெல்லிக்கும் மற்றொரு பகுதியை கேரள முதல்வர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார். அதனைட் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை

நாளை அக்டோபர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட இருக்கிறது. இதில் பெண்களை அனுமதிக்கலாமா இல்லை வேண்டாமா என்ற ரீதியில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று கூட்ட இருக்கிறது திருவிதாங்கூர் தேவசம் போர்ட்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close