கேரள மாநிலத்தில் சபரிமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகரஜோதி விழாவில், பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

கேரள மாநிலத்தில் உள்ல பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை மற்றும் மகரஜோதி பெருவிழா ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.
Advertisment
Advertisements
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மகரஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்புக்காக தேசியப் பேரிடா் மீட்புப் படையினா், அதிரடி படை வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில், 1400 காவலா்களும், 15 துணை காவல் துறைக் கண்காணிப்பாளா்களும், 36 காவல் துறை ஆய்வாளா்களும் சந்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஐயப்பன் கோயில் மகரஜோதி பூஜைக்காக ஆண்டுதோறும் பந்தளத்திலிருந்து ஸ்வமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வருவது மரபாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று பகல் 1.00 மணிக்கு பந்தளம் அரண்மனையிலிருந்த திருவாபரண பவனி புறப்பட்டது.
இந்த திருவாபரண பரணி மாலை 6.25 மணிக்கு சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு வந்து சேர்ந்தது. மகரஜோதியை முன்னிட்டு நேற்று முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து குவியத்தொடங்கியதால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால், சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மகரஜோதிக்கு முன்னதாக, பந்தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, சரியாக மாலை 6.50 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தோன்றியது.
மகரஜோதியை தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரணம் கோஷமிட்டு வழிபாடு செய்தனர். மகரஜோதி மூன்று முறை தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தது.
மகரஜோதியை தரிசனம் செய்த லட்சக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் வின்னதிர சரண கோஷமிட்டு ஐயப்பனை வணங்கினர்.