சபரிமலை முன்பு இந்துக்கள் போராட்டம் செய்வதற்கு என்ன காரணம்? விளக்கம் தந்த ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத்!

இந்துக்கள் மனதை எப்படி புண்படுத்தும் என நினைக்கவில்லை.

சபரிமலை விவகாரத்தில் ஐயப்ப பக்தர்களை கேரள ஒடுக்கிறது என்றும், சபரிமலை முன்பு இந்துக்கள் போராட்டம் செய்ய பல காரணங்கள் இருப்பதாக ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத் :

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளாவை ஓட்டி, ஆர்.எஸ்‌.எஸ் சார்பில் துறவியல் மாநாடு நேற்று (31.2.19) தொடங்கியது. இதில் ஆர்.எஸ்‌.எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட பலர் கலந்துக் கொண்டர். அப்போது மேடையில் பேசிய மோகன் பகவத், சபரிமலை விவகாரம், கேரள அரசு, இந்துக்கள் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்களை குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ சபரிமலை விவகாரத்தில் ஐயப்ப பத்கர்களை கேரள அரசு கடுமையாக ஒடுக்குகிறது. இதன் விளைவாக மனதளவில் காயப்பட்ட பக்தர்கள், இந்துக்கள் கோயில் முன்பு ஆர்பாட்டம், போராட்டத்தில் ஈடுப்படுகின்றனர். இதற்கு நாங்கள் (ஆர்.எஸ்.எஸ்) முழு ஆதரவு தருகிறோம்.

சபரிமலை விவகாரத்தில் பெண்களும் செல்ல அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்கள் முதலில் ஐயப்ப பக்தர்களே இல்லை. சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதித்தும் எந்த பெண்ணும் சபரிமலைக்கு செல்லவிரும்பவில்லை. அதனால்தான் இலங்கையில் இருந்து பெண்ணை அழைத்துவந்து, பின்பக்கம் வழியாக சாமி தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதித்தது.

அனைத்து மதங்களையும் பின்பற்றுவோரும் எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் செல்லலாம். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயில் சாதாரண இடம் அல்ல, குறிப்பிட்ட பாரம்பரியங்களை பின்பற்றும் இடமாகும்.மத ரீதியலான நடவடிக்கையால் பிளவுப்பட்டு உள்ள இந்து சமூகத்தை ஒன்றாக இணைக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்து சமூகத்தின் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களை சிதைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வருத்தம் அளிக்ககூடிய ஒன்று. சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என நீதிமன்ற தீர்ப்பு வ்ழங்குவதற்கு முன்பு அது இந்துக்கள் மனதை எப்படி புண்படுத்தும் என அவர்கள் நினைக்கவில்லை.

ஐயப்ப பக்தர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அவர்கள் ஒடுக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது”என்று மோகன் பகவத் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close