சபரிமலை கோயில் நடை 5ம் தேதி திறப்பு… 144 தடை உத்தரவு

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை அடுத்து, சபரிமலைக்கு செல்ல பெண்கள் பலரும் முயற்சி செய்தனர். பெண்களின் நுழைவை கண்டித்தும் தீர்ப்புக்கு எதிராகவும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் இப்போராட்டம் வன்முறையாக வெடித்தது. சமரிமலை கோவிலில் 144 தடை உத்தரவு இந்த நிலையில், சிறப்பு வழிபாட்டிற்காக சபரி மலை […]

Sri Lankan woman tries to enter Sabarimala, சபரிமலை
sabarimala temple, சபரிமலை கோவில், Sabarimala verdict

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை அடுத்து, சபரிமலைக்கு செல்ல பெண்கள் பலரும் முயற்சி செய்தனர். பெண்களின் நுழைவை கண்டித்தும் தீர்ப்புக்கு எதிராகவும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் இப்போராட்டம் வன்முறையாக வெடித்தது.

சமரிமலை கோவிலில் 144 தடை உத்தரவு

இந்த நிலையில், சிறப்பு வழிபாட்டிற்காக சபரி மலை கோயில் நடை நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளது. அதாவது 5ம் தேதி பக்தர்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த முறை போலவே இம்முறையும் பெண்கள் கோவிலுக்குள் வர முயற்சிகள் எடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படும் நிலையில் கேரளாவை பதற்றம் மீண்டும் தொற்றிக்கொண்டது.

இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக சபரி மலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 6-ஆம் தேதி வரை பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sabarimala temple reopen for darshan on 5th november 144 imposed

Next Story
கர்நாடகா இடைத்தேர்தல் 2018: யார் கை ஓங்கும்?கர்நாடகா இடைத்தேர்தல் 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X