Advertisment

சபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கின்றோம் - தேவசம் போர்ட்

Sabarimala Temple Review Petition : ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்த 2 பெண்களுக்கு எதிராக ஐந்தாவது முறையாக கேரளாவில் கடையடைப்பு நடைபெற்றது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala Temple Review Petition

Sabarimala Temple Review Petition

Sabarimala Temple Review Petition : கடந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்று தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

Advertisment

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதிமன்ற அமர்வில் நான்கு நீதிபதிகள் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளம் ராஜ குடும்பத்தினர், முதன்மை தந்திரி குடும்பத்தினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.

தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உள்ளிட்டோர் சார்பில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும் பாஜக, காங்கிரஸ், மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.

மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து அம்மிணி என இரண்டு பெண்கள் ஜனவரி 2ம் தேதி சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்தனர். அது மிகப்பெரும் பிரச்சனையையும், கலவரத்தையும் கேரளத்தில் உருவாக்கியது.

மேலும் படிக்க : கணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி

Sabarimala Temple Review Petition - நிகழ்வுகள் உடனுக்குடன்

03:00 PM : இந்திரா ஜெய்சிங் வாதம்

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்தே பெண்களுக்கு ஆதரவாக ஆஜரானவர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். இன்று தன்னுடைய வாதத்தில் “19ம் நூற்றாண்டின் முற்பாதி வரை ஆங்கிலத்தில் ”அன்டச்சபிளிட்டி” என்ற வார்த்தையே இல்லை என்று வாதிட்டார்.

02:00 PM : திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிலைப்பாடு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் பின்பற்றுவோம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்ட் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  நாங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து பெண்களின் கோவில் வருகையை ஆதரித்தோம் என்று இன்றைய விசாரணையில் கூறியுள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்ட்.

01:00 PM : சபரிமலை தொடர்பாக தொடரப்படும் எந்த விதமான மறுபரிசீலனை மனுக்களையும் நிச்சயமாக கேரள அரசு எதிர்க்கும் என்று தங்கள் தரப்பில்

12:00 PM : சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம் தீண்டாமை அல்ல

"சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்... தீண்டாமை அல்ல” - பராசரன் வழக்கறிஞர் வாதம். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம் வேறானது. இந்த பாரம்பரியத்துடன் பெண்களின் அனுமதியை இணைத்து பார்க்கக் கூடாது. இந்திய மக்கள் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்ற அவர்களுக்கு உரிமை இருப்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது என்று அவர் வாதம் செய்தார்.

11:00 AM : நாயர் சொசைட்டி சர்வீஸ் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்

நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் வாதம் செய்து வருகிறார்.

10:45 AM : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்த்ரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு இன்று இந்த விசாரணையை மேற்கொள்கிறது.

10:30 AM : மறுசீராய்வு மனுக்கள் விசாரணை தொடங்கியது

Sabarimala Lord Ayappa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment