சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண் பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற 2 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது ஐயப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
சபரிமலை போராட்டம்:
இந்நிலையில், சென்னையை சேர்ந்த மனிதி என்ற அமைப்பில் இருந்து 11 பெண்கள் நேற்று சபரிமலைக்குச் சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் சில நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சன்னிதானம் செல்லும் பெண் பக்தர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
DK thugginies from TN who went to #Sabarimala being chased away!! One of them asks "Selvi Thozhar Enga?" (Where is comrade Selvi), a terminology commonly being used by Commies & DK in TN!
DKs. in the name of activism. are hellbent on hurting HINDU sentiments, is evident again! pic.twitter.com/svQ7EFdUxp
— Ethirajan Srinivasan (@Ethirajans) 23 December 2018
பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்தும், போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரிலும் சென்னை பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லும் தங்கள் முடிவை கைவிட்டனர். பின்னர் போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றி தமிழக எல்லை வரை கொண்டு வந்து பாதுகாப்பாக விட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தின் காரணமாக பம்பையில் நேற்று அதிகாலை முதல் மதியம் 1 மணி வரை பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.