சபரிமலை நடையை மூட தந்திரி யார்? கேரள அமைச்சர்களின் அடுத்தடுத்த கேள்விகள்!

சபரிமலை நடையை மூட எந்தவித அதிகாரமும் இல்லை

By: Updated: October 22, 2018, 01:48:25 PM

சபரிமலை கோயிலுக்குள் ஏதேனும் விதிகள் மீறப்பட்டால் நடை மூடப்படும் என்று கூறுவதற்கு தந்திரி யார்? என்று கேரள அமைச்சர் ஜி சுதாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை தந்திரி:

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலர் எதிர்த்து வந்தனர். இந்த தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு ஐப்பசி பூஜைக்காக பல பெண்கள் வந்தனர். இருந்தாலும் இன்றுவரை சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழையமுடியாமல் உள்ளனர்.

10-50 வயது பெண்கள் உள்ளே நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுக்க தொடங்கினார்கள். பல போலிஸுகள் பாதுகாப்பிற்கு இருந்தாலும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தே வருகின்றனர். நேற்று பாதுகாப்பில் சன்னிதானம் வரைக்கும் சென்ற இரண்டு பெண்களும் பக்தர்களின் போராட்டத்திற்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பந்தள குடும்பம்:

சபரிமலையில் போராட்டம், பதற்றம், 144 தடை உள்ள நிலையில், சபரிமலை தந்திரி கோயிலுக்குள் விதிகள் மூடப்பட்டடால் நடை மூடப்படும் என்று   கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை  எதிர்த்து அவர் கூறியிருந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதனைத்தொடர்ந்து, பந்தள ராஜ குடும்பமும் தேவஸ்ம் போர்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.அந்த கடிதத்தில், சபரிமலையில் ஏதேனும் தவறாக  நடந்தால்  நடையை மூடிவிடுங்கள்.  தந்திரி ஒப்பதலுக்கு பின்னரே  நடை திறக்கப்பட வேண்டும் என்று  கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கடிதமும், தந்திரியின்  சர்ச்சை கருத்திற்கும்  கேரள அமைச்சர்  ஜி சுதாகரன் சரமாரியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.  இதுக் குறித்து பேசியுள்ள கேரள பொதுத்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் “ சபரிமலையின் கோயில் தந்திரி எப்படி நடையை  மூடிவிடுவேன் என்று மிரட்டலாம்.அவர் கோயிலின் தந்திரியா இல்லையா உரிமையாளரா?   அதே போல் பந்தள ராஜ குடும்பம் நடையை மூட எப்படி சொல்லலாம் ? அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போல் கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம். எம் மணி, ” நடையை மூட சொல்ல தந்திரிக்கும், ராஜ குடும்பத்திற்கு எந்த்வித அதிகாரமும் இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.  ”நாம் ஜனநாயக நாட்டில்   வாழ்கிறோம் மன்னர் ஆட்சி இல்லை.  சபரிமலை நடையை மூட எந்தவித அதிகாரமும் இல்லை “ என தெரிவித்துள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sabarimala temple row two kerala ministers lock horns with royal family

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X