கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் திருநடை புதன்கிழமை (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மாளிகைப்புரம் சன்னிதான மேல்சாந்தியிடம் கோவில் சாவி மற்றும் திருநீர் வழங்கப்படும். அதன்பின்னர் ஆளி நெருப்பு பற்ற வைக்கப்படும்.
Advertisment
இந்த நெருப்பு 18 படி வழியே இறங்கிச் சென்று பற்ற வைக்கப்படும். இது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்க உள்ளனர். தொடர்ந்து கார்த்திகை மாத 1ஆம் தேதியான வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புதிய மேல்சாந்தி நடையை திறந்து பூஜைகள் மேற்கொள்வார்.
தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி ஐயப்பனுக்கு அங்கி சார்த்தி தீபாதாரனை காட்டும் நிகழ்வு டிசம்பர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். இதையடுத்து ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு தரிசனம் நடைபெறும். அதன்பின்னர் ஜனவரி 20ஆம் தேதி திருநடை சாத்தப்படும்.
சபரிமலை கோவில் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மற்றும் செய்யாத பக்தர்களும் ஏதேனும் ஓரிஜினல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் வளாகத்தில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தீயணைப்பு மற்றும் கர்ம சேனா தன்னார்வலர்கள் நடபந்தல் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil