சபரிமலை கோயில் வழக்கில் எதிர்தரப்பினர், ஏற்கனவே இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே திங்கள்கிழமை அவர்களுடைய எதிர்தரப்பினரின் பரிந்துரைகளைத் தாக்கல் செய்ய மூன்று வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
மேலும், அவர்உச்சநீதிமன்றத்தின் பொதுச் செயலர், வழக்கறிஞர்களுடன் ஒருங்கிணைந்து இந்த விவகாரத்தில் மறுசீரமைப்பு அல்லது இதில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியவைகளை மேற்கொள்வார் என்றார்.
கேரளாவின் சபரிமலை கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டு இடங்களில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
சபரிமலை கோயில் பிரச்சினையில் கடந்த ஆண்டு நவம்பர் 14 ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மறுஆய்வு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளை மட்டுமே விசாரிக்கப்படும் என்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது. “சபரிமலை வழக்கின் மறுஆய்வு மனுக்களை நாங்கள் விசாரிக்கவில்லை. முன்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை மட்டுமே நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று ஒன்பது நீதிபதிகள் அமர்வு கூறியதாக பி.டி.ஐ. தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நவம்பர் 14-ம் தேதி ஒரு பெரிய அமர்வை விசாரிக்க கேட்டுக் கொண்டது.
சபரிமலை கோயிலிலும் மசூதிகளிலும் பெண்கள் நுழைவது மற்றும் தாவூதி போஹ்ரா சமூகத்தில் உள்ள பெண்களுக்கு கந்தருக்கும் வழக்கம் உள்ளிட்ட பல்வேறு மத விஷயங்களை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியது.
சபரிமலை கோயிலில் மாதவிடாய் வயது பெண்கள் நுழைவது தொடர்பான விவகாரத்தில், தலைமை நீதிபதி எஸ். ஏ போப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் விசாரணைக்கு மொத்தம் 60 மனுக்கள் வந்தன. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், எஸ்.ஏ.நசீர், எம்.எம்.சந்தனகவுடர், ஆர்.சுபாஷ் ரெட்டி, மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் ஆகியோர் உள்ளனர். புதிய அமர்வில் முந்தைய அமர்வில் இருந்த நீதிபதிகள் இல்லை.
2018-இல் சபரிமலை கோயில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனவரி 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. “2020 ஜனவரி 13 திங்கள் முதல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன் விசாரணைக்கு பின்வரும் விவகாரங்கள் பட்டியலிடப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தை ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கும்போது , ஒரு மத இடத்திற்கு பெண்கள் நுழைவதைத் தடுப்பது போன்ற நடைமுறைகள் அரசியலமைப்பு வரையிலான விவாதம் சபரிமலை வழக்கில் மட்டும் இல்லை என்று கூறியிருந்தது.
முஸ்லீம் பெண்கள் மசூதிகளிலும், 'தர்காக்களிலும்' நுழைவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அதேசமயம் பார்சி அல்லாத ஆண்களை மணந்த பார்சி பெண்கள் ஒரு அக்யரியின் புனித யாகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு, நிலையான மற்றும் முழுமையான நீதியை உறுதிப்படுத்த நீதித்துறை கொள்கையை உருவாக்குவற்கான நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.