சபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி

மத நம்பிக்கைகள் தொடர்பான பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என தீர்ப்பு

சபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட கருத்து : கேரளாவின் பிரபல ஐய்யப்பன் கோவிலான சபரிமலையில் பெண்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டே வந்தது.  இதனைத் தொடர்ந்து பெண்ணிய அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மனுத்தாக்கல்கள் செய்தனர்.

அதனை இன்று விசாரித்த ஐவர் கொண்ட அமர்வு நீதிமன்றம் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி அளித்து தீர்ப்பினை வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், ஆர்.எஃப். நரிமன் மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் ஒரே மாதிரியான தீர்ப்பினை வழங்க, நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.

இது தொடர்பான செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள

சபரிமலை தீர்ப்பு இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு

இந்த வழக்கின் தீர்ப்பினை வெளியிட்ட ஐந்து நீதிபதிகளில் இவர் மட்டுமே பெண். அவர் தன்னுடைய தீர்ப்பினை வாசிக்கும் போது “ஒரு மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் நீதிமன்றங்கள் மாற்றி அமைக்க முயலக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் பகுத்தறிவு கருத்துகளை மதங்களுக்குள் திணிக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

To read this article in English

ஒரு மதத்தில் எதை பின்பற்ற வேண்டும் என்பதை அந்த மதத்தினை சார்ந்தவர்களே முடிவு செய்வார்கள். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. அவரவர் மத நம்பிக்கைகளை முழு சுதந்திரத்துடன் பின்பற்ற அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது. இதனால் இது போன்ற விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று தன் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார் இந்து மல்ஹோத்ரா.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close