Advertisment

Sabarimala verdict : சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

Sabarimala verdict in supreme court live updates in Tamil: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lankan woman tries to enter Sabarimala, சபரிமலை

sabarimala temple, சபரிமலை கோவில், Sabarimala verdict

Sabarimala Verdict : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கேரளா அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக எல்லா வயது ஆண்களும், 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

10 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், மாத விடாய் அடையும் காரணத்தினாலும், மாதந்தோறும் வரும் 3 நாட்கள் மாதவிடாய் தீட்டு என்ற காரணத்தை சுட்டிக் காட்டியும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியை மறுத்தது சபரிமலை கோவில் நிர்வாகம்.

சபரிமலை தீர்ப்பு, supreme court sabarimala verdict in tamil:

இந்நிலையில், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், ஆண்களை போலவே எல்லா வயது பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.

2.08 PM : பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் என சுகி சிவம் கருத்து தெரிவித்துள்ளார்.

2.00 PM : சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் என கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

1.15 PM :  சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது; சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது என 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வாசித்தார்.

1.00 PM : “ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும்” என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

11.22 AM : சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.

11.15 AM : ஐயப்பனை வழிபடும் பெண்களே சபரிமலைக்கு வருகிறார்கள் என்பதால், நாங்கள் இந்த தீர்ப்பை ஏற்றுகொண்டு எல்லா வயது பெண்களையும் வரவேற்கிறோம் என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

11.03 AM : உடல் மற்றும் உளவியல் காரணங்களைக் கூறி பெண்களின் உரிமைகளை மறுக்க முடியாது, பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல; கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

10.51 AM : சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

10.48 AM : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை வாசித்து வருகிறார். சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 4 தனித்தனி தீர்ப்புகள் இன்னும் சற்றுநேரத்தில் வழங்கப்படவுள்ளது.

10.45 AM : 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வாசிப்பு. அதில், “ஆண் பெண் இருவரும் சமமே. ஆண் உயர்ந்தவராகவோ, பெண் கீழ் என்றோ கிடையாது. ஆண் மற்றும் பெண் இடையே எவ்வித பாகுபாடும் கிடையாது.” என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.

10.00 AM :  இந்த தீர்ப்பை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எஃப். நாரிமான், ஏ.எம். கான்வில்கார், டி.ஒய். சந்திரசுத் மற்றும் இந்து மல்ஹோத்திரா ஆகியோர் கொண்ட அமர்வு வழங்குகிறது.

9.50 AM : சபரிமலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க கோரும் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

India Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment