Sabarimala verdict review petition : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்தாண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிடுகிறது.
கடந்தாண்டு செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பளித்தது. இதற்கிடையே நீதிபதி இந்து மல்கோத்ரா, இதர நீதிபதிகளுடன் முரண்பட்டிருந்தார். மத ரீதியான பழக்கவழக்கங்களுடன், பெண்களுக்கான சம உரிமையை தொடர்புபடுத்த முடியாது. மேலும் மத ரீதியான பழக்க வழக்கம் தொடர்பாக கோர்ட்டால் எந்த முடிவும் எடுக்க முடியாது. வழிபடுபவர்கள்தான் முடிவை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தன. நிறைய கலவரங்களும் வெடித்தன. அதோடு அனைத்துப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, 5 ரிட் பெட்டிஷன் உட்பட மொத்தம் 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் பாலி நாரிமன், ஏ எம் கான்வில்கர் , டி.ஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரும், தீர்ப்பு வழங்கும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Live Blog
Sabarimala Review Verdict Updates
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்பை எதிர்த்து தொடரப்பட்ட, மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 28, 2018 அன்று, 4: 1 என்ற பெரும்பான்மை தீர்ப்பின் மூலம், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கேரளாவின் புகழ்பெற்ற ஐய்யப்பன் கோயிலுக்கு செல்வதை தடுக்கும் தடையை நீக்கியது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்து மத நடைமுறைக்கு சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் மாதவிடாய் வயதுடைய பெண்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கோயில் பாதுகாவலர்கள் வாதிடுகின்றனர்.
கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம், 'ஜனநாயக எல்லைக்குள் உண்மையானவர்களுடன் இணைந்து நிற்கும் யுடிஎஃப் நிலைப்பாடு சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு உணர்வுகளைப் பாதுகாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ' என்றார்
பாஜகவின் மூத்த தலைவர் ராம் மாதவ் , "இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் முக்கியமானவை. சபரிமலையை பொறுத்தவரை, இது கடந்த ஆண்டின் சிறிய பெஞ்ச் உத்தரவை ஆதரிக்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.
Supreme Court's decisions today are important. On Sabarimala it didn't uphold d smaller bench order of last year. Hence Kerala govt shouldn't precipitate d matter. Rafael order too on expected lines exposing d irresponsibility of several eminences.
— Ram Madhav (@rammadhavbjp) November 14, 2019
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற, சபரிமலை கோயிலின் தலைமை அர்ச்சகர் கந்தாரு ராஜீவாரு, "நாங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். பெரிய பெஞ்சிற்கு வழக்கை மாற்றியிருப்பது, எங்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. இது பக்தர்களுக்கு அதிக பலத்தை அளிக்கும். இது ஒரு நல்ல விஷயம். ஐய்யப்ப பக்தர்களை ஒரு தனி சமூகமாக தீர்ப்பு கருதுகிறது. மதமும் சட்டமும் அதில் கலக்கப்படக்கூடாது. " என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனுதாரர்களின் முயற்சி மதம் மற்றும் நம்பிக்கை குறித்த விவாதத்தை உருவாக்குகிறது என்று கூறினார். மத இடங்களில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் சபரிமலைக்கு மட்டுமில்லை, மற்ற மதங்களிலும் இது நடைமுறையில் உள்ளது என்றார்.
உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். எனவே 3:2 என்ற விகிதத்தில் இவ்வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலை கோயில் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மாநிலம் கடமைப்பட்டுள்ளதாகவும், மாதவிடாய் வயது பெண்கள் சன்னதிக்கு வருவதைத் தடுக்க எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர முடியாது என்றும் கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஐயப்பனின் பக்தர்கள் ஒரு தனித்துவமான மதப் பிரிவைக் கொண்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது. தனித்துவமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்க உரிமை உண்டு. ஐய்யப்ப பக்தர்களுக்கு வகுப்பறை அந்தஸ்தை வழங்க சபரிமலை கோயிலின் தனித்துவமும் அதன் வரலாறும் போதுமானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். ஐயப்பன் ஒரு தனி மதத்தை அமைத்ததாகவும், அவர்களின் தனித்துவமான நடைமுறைகளைப் பின்பற்ற உரிமை உண்டும் எனவும் நீதிபதி இந்து மல்ஹோத்ரா முரண்பட்டார்
மூத்த வழக்கறிஞர் வி கிரி, கோயில் அனைத்து நபர்களையும் உள்ளே நுழைய அனுமதிக்கிறது என்றும் சாதி, பாலினம் மற்றும் மதம் அடிப்படையில் எந்தவொரு வகை குடிமகனையும் விலக்க முடியாது என்றும் கூறினார். "வழிபாட்டுக்கான அடிப்படை உரிமையில் தெய்வத்தின் தன்மையும் அடங்கும், மேலும் ஒவ்வொரு பக்தரும் இதனை கேள்வி கேட்க முடியாது, அங்குள்ள மத நடைமுறையின் ஒரு பகுதியாக இது உள்ளது" என்று அவர் கூறினார்.
காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரள காவல்துறையினர் கடுமையான விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிக்கலை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாயர் சர்வீஸ் சொசைட்டியில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே பராசரன், பெரும்பான்மையானோரின் தீர்ப்பை விமர்சித்தார். மறுபரிசீலனை செய்ய முயன்ற அவர், சமூகத்தில் தீண்டத்தகாத தன்மையை ஒழிப்பது தொடர்பான 17 வது பிரிவை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தவறாகப் பயன்படுத்தியுள்ளது, எனவும் குறிப்பிட்ட சில வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது சாதியை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றார்.
சில வலதுசாரி ஆர்வலர்கள், மாநில சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மாற்றியதாக குற்றம் சாட்டினர். ஐயப்பன் சன்னதிக்குள் பெண்கள் நுழைவது குறித்து முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்த கேரள அரசு, தீர்ப்பை ஆதரித்து, மறுஆய்வு மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தியது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், பிப்ரவரி 6, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருபவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை விசாரித்து முடித்தது. நீதிபதிகள் ஆர் எஃப் நரிமன், ஏ எம் கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த பெஞ்சின் மற்ற உறுப்பினர்கள்.
கேரளாவின் சபரிமலை கோயிலுக்குள் மாதவிடாய் சுழற்சி உள்ள பெண்கள் செல்லக் கூடாத என்ற தடையை 2018-ல் உச்ச நீதிமன்றம் நீக்கியது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையான இன்று வழங்குகிறது. அனைத்து சமீபத்திய அப்டேட்டுகளையும் தெரிந்துக் கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்
1986-ல் நம்பினார் கெடுவதில்லை என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பு, கோவிலின் படிக்கட்டுகளுக்கு அருகே நடைபெற்றபோது, அங்கு ஒரு நடனக் காட்சியில் பங்கு பெற்ற ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், அனு, வடிவுக்கரசி மற்றும் மனோரமா ஆகிய நடிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights