Advertisment

என் வாழ்க்கையில் முக்கியமான பெண்கள் : மனம் திறக்கிறார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (வீடியோ)

Sachin Tendulkar on Womens day : கிரிக்கெட் உலகின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, தன் வாழ்வில் மறக்க முடியாத பெண்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
Mar 08, 2020 13:17 IST
Sachin tendulkar, womens day, womens day wishes, mother, wife anjala, daughter Sara, life, health, cricket legend, video, viral

Sachin tendulkar, womens day, womens day wishes, mother, wife anjala, daughter Sara, life, health, cricket legend, video, viral

கிரிக்கெட் உலகின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, தன் வாழ்வில் மறக்க முடியாத பெண்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதக் குலத்தை செம்மையடைய செய்யும் பெண்களை போற்றும் விதமாக உலகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் தினத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் தங்கள் வாழ்வில் முக்கிய பங்காற்றும் பெண்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகளிர் தினமான இன்றைய தினத்தில், தன் வாழ்வின் முக்கியமான 5 பெண்கள் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என் வாழ்க்கையில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். என்னுடைய அம்மா, என்னுடைய அத்தை, என்னுடைய மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், என்னுடைய மகள் சாரா என ஐந்து பேரை சச்சின் குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லா அம்மாக்களைப் போலவும் என்னுடைய ஆரோக்கியத்திற்கும், உடல்நலத்திற்கும் என் அம்மாவே காரணம் என அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடைய அத்தை, மனைவி, மகள் என ஒவ்வொருவரையும் குறித்து தன் நினைவுகளையும், தன் எண்ணங்களையும் வீடியோவில் சச்சின் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சச்சின் வெளியிட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Sachin Tendulkar #Womens Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment