Senior Badal back in fight: ‘All powers with Centre, state parties must unite’: “பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு முன்மாதிரியான தலைவர்... அதிகாரங்களை மையப்படுத்தும் மோடி அரசின் போக்கு நாட்டை பலவீனப்படுத்தும். இந்த சவாலை ஏற்க பிராந்திய கட்சிகள் ஒரு முன்னணியை உருவாக்க வேண்டும்.”
கொரோனா உடனான சமீபத்திய போருக்குப் பிறகு இன்னும் பலவீனமாக இருந்தாலும், ஷிரோமணி அகாலிதளத்தின் நிறுவனரும் ஐந்து முறை பஞ்சாப் முதல்வராகவும் இருந்த பிரகாஷ் சிங் பாதல் (94), தனது கட்சி மற்றும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாப்பதில் எப்போதும் போல் வலுவாக இருக்கிறார்.
பிப்ரவரி 3 அன்று நடந்த மூன்று பொதுக் கூட்டங்களுக்குப் பிறகு ஒரு சிறிய ஓய்வு நேர உரையாடலில், "பேட்டா (மகனே), நான் இப்போது சோர்வாக இருக்கிறேன்" என்று மெதுவாக கணைத்துக் கொண்ட பாதல், பஞ்சாபின் உரிமைகளுக்காகப் போராடியதே தனது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று கூறினார். “ஒரு கட்சியாக, பஞ்சாபில் எந்த ‘சங்கட்’ (சிக்கல்) ஏற்பட்டாலும், அது எமர்ஜென்சி அல்லது அதன் உரிமைகளுக்கான போராட்டமாக இருந்தாலும், நாங்கள் எப்போதும் முன்னணியில் இருந்தோம். நானே 15 வருடங்கள் சிறையில் இருந்தேன். நான் அரசாங்கத்தை அமைத்தபோது, நான் ராஜ்ஜ் கே (வரம்பற்ற) வளர்ச்சியை செய்தேன்.
"விவசாயிகளாக இருந்தாலும் சரி, தொழிலாளிகளாக இருந்தாலும் சரி, வியாபாரிகளாக இருந்தாலும் சரி, அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்" என்று பாதல் கூறினார். செல்ஃபி எடுக்க மக்கள் அவரது காரை சூழ்ந்தபோது, நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது கைகள் தானாக இணைந்தன.
இது, அவரது அரசாங்கத்திற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பு, இதற்கு பாதல் சிறப்புப் பெருமிதம் கொள்கிறார். “ஒரு கட்சியாக, அரசாங்கமாக, நான் என் கடமையைச் செய்தேன். இந்தியாவிலேயே, நேரடி தரிசனம் செய்யும் ஒரே முதல்வர் நான்தான்,'' என கூறிய பாதல், அதிகாரிகளை எப்படி மக்களிடம் கொண்டு செல்வேன் என்பதை விவரித்தார். "நாங்கள் வார்டுகளுக்கும் கிராமங்களுக்கும் செல்வோம். இதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியும் என்று பாதல் கூறினார்.
கூட்டாட்சி கட்டமைப்பிற்காக, 1982 ஆம் ஆண்டு ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானத்தின் கீழ் பஞ்சாபிற்கு அதிக அதிகாரங்களைப் பெறுவதற்காக அவரது கட்சி ஒருமுறை தரம் யுத் மோர்ச்சாவை நடத்தியது பற்றி குறிப்பிடுகையில், ஆரோக்கியமான உடலுக்கு அனைத்து "ஆங் (மூட்டு)"களும் வலுவாக இருக்க வேண்டும், சக்தி வாய்ந்த இந்தியாவுக்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பாதல் கூறினார். மேலும், தற்போது அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளுக்கு சென்றுவிட்டன. எனவே, பிராந்திய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் பாதல் கூறினார்.
எந்தத் தலைவரை உங்களது ஐடியலாக (சிறந்த, ஏற்றுகொள்ளத்தக்க) கருதுகிறீர்கள் என்று கேட்டால், பாதல் ஒரு கணம் நிதானித்து, பிறகு பதிலளித்தார், “வாஜ்பாய், அவர் ஒரு சிறந்த தலைவர். அவர் மக்களிடையே பாகுபாடு காட்டவில்லை... அனைவரையும் அரவணைத்துச் சென்றார்.
ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் அன்பான உறவை பேணிய முன்னாள் முதல்வரான பாதல், நாட்டை ஒருமுகப்படுத்தும் முயற்சியையும் விமர்சித்தார். "ஒருமுகப்படுத்தல் மிகவும் தீங்கு விளைவிக்கும். இது மக்களை எந்த முன்னேற்றத்தையும் அடைய அனுமதிக்காது.” என்று கூறினார்.
ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த அவரது அரசியல் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, லாகூரில் பட்டப்படிப்பை முடித்து வீட்டிற்கு வந்தபோது, அவரது கிராமம் அவரை எப்படி ஒரு சர்பஞ்ச் (கிராம தலைவர்) ஆக்கியது என்பதை பாதல் நினைவு கூர்ந்தார். "நான் அமைச்சரான கியானி கர்தார் சிங்கிடம் சென்று, என்னை பிசிஎஸ் அதிகாரியாக (தாசில்தார்) பரிந்துரைக்கும்படி கேட்டேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார், 'அமைச்சர் என்னிடம் நீங்கள் வேலை கொடுக்கும் ஒருவராக மாற வேண்டும்' என்று கூறினார்."
இது ஜாகர் குலத்தின் ஆதிக்கத்தில் உள்ள கில்லியன்வாலி கிராமத்தில் நடக்கும் கதை. ஜவஹர்லால் நேருவின் காலத்தில் கர்தார் சிங் அவர்களின் தேசபக்தர் மற்றும் எம்.பி.
பாதல் தப்வாலி ரஹுரியன்வாலி கிராமத்தில் இருந்து அன்றைய நாளைத் தொடங்கினார். அது ஒரு குளிர், மூடுபனி, மழை நாள், தாமதத்திற்கு சரியான சாக்கு, ஆனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மூத்த அரசியல்வாதியான பாதல் லாம்பியில் உள்ள கங்கன் கேரா கிராமத்தில் அவரது கூட்டத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே அங்கு இருந்தார்.
ஒரு கொட்டகையின் கீழ் அவருக்காகக் காத்திருந்த கிராம மக்கள் குழு ஒன்று பாதல் உள்ளே செல்லும்போது எழுந்து நின்றது, அவர் உள்ளே செல்ல அவருடைய பாதுகாவலர்கள் உதவினார்கள். அங்கிருந்த மக்களை அதுவரை உற்சாகப்படுத்தி வந்த தாதி ஜாதா, நிறுத்தியபோது, பாதல் மக்களை வரவேற்றார், "உங்களைப் பார்த்ததில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது." சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தத்தெடுத்த கிராமத்தை நினைவுபடுத்திய அவர், அவருடனான நீண்ட தொடர்பை நினைவுபடுத்தினார். "நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன், நான் உங்களிடம் ஏதேனும் கோரிக்கை வைத்தாலும், அது ஒரு சிறிய சண்டையாக இருந்தாலும் சரி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள்... நீங்கள்தான் என் குடும்பம்." என்று கூறினார்.
பாதல் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறினார், ஆனால் கட்சி அவரை வற்புறுத்தியது, அவரின் வெற்றி கட்சி அரசாங்கத்தை அமைக்க உதவும் என்று கட்சி கூறியது. மற்ற கட்சிகள் குறித்தும் பாதல் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். “ஆபரேஷன் புளூ ஸ்டார் மற்றும் 1984 கலவரங்களுக்கு காங்கிரஸ் தான் பொறுப்பு, அது நமது தலைநகரை (சண்டிகர்) கொள்ளையடித்தது. ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தை கைப்பற்ற மட்டுமே விரும்புகிறது. என்று பாதல் கூறினார்.
முடிக்கும்போது, பாதல் மீண்டும் முறையிட்டார்: “ஹத் ஜோட் கே பெண்டி (நான் கூப்பிய கைகளுடன் முறையிடுகிறேன்). தயவு செய்து முந்தைய பதிவுகளை (வாக்களிப்பதில்) முறியடிக்கவும்... நான் கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால், என்னை மன்னியுங்கள்.
அவர் சென்றதும், சிலர் அவரது காதில் கிசுகிசுத்த கோரிக்கைகளுடன் அவரை அணுகினர்.
அகாலிதளத்தில் புதிதாக நுழைந்த ஒரு குழுவை வரவேற்க அவர் கிராமத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தினார்.
இங்கே லாம்பியில், பஞ்சாபின் மிகப்பெரும் தலைவருக்கு ஆதரவாக நிற்க அவர்களுக்கு அதிக நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. இரண்டாவது கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே நின்றுகொண்டிருந்த கோரா சிங் என்ற விவசாயி, பாதல் தங்கள் கிராமத்தின் நிறத்தை மாற்றிவிட்டதாகவும், காங்கிரஸ் ஆட்சி தங்களைப் புறக்கணித்ததாகவும் கூறினார். "எங்கள் பருத்தி பயிர் அழிக்கப்பட்டது, ஆனால் அரசாங்கம் இன்னும் ஒரு பைசா கொடுக்கவில்லை," என்று சரத் சிங் கூறினார்.
இருப்பினும், அருகிலுள்ள டப்வாலி ரஹுரியன்வாலியில், பாதலின் நல்லெண்ணத்தை மட்டும் நம்பி வாக்களிக்க முடியாது என்று கிராம மக்கள் தெரிவித்தனர். "அகாலிகள் மீது ஜாதேதர்களால் (உள்ளூர் தலைவர்கள்) மக்கள் கோபம் கொண்டுள்ளனர். இது ஒரு எளிய நடைபாதையாக இருக்காது, ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மீத் சிங் குதியானிடம் இருந்து பாதல் சாப் கடுமையான போட்டியை எதிர்கொள்வார்,” என்று ஹனி ப்ரார் கூறினார்.
11 முறை எம்எல்ஏவாக இருந்த பாதல், தனது ஆறாவது தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2017 ஆம் ஆண்டில், அவர் அப்போதைய காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்கை கிட்டத்தட்ட 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார், இது ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்ற மொத்த வாக்குகளை விட (21,254) அதிகம்.
குதியான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை ஜதேதார் ஜக்தேவ் சிங் ஒரு முறை ஃபரித்கோட் எம்.பி.,யாக இருந்துள்ளார்.
இருப்பினும், இறுதியில், அவரது கடைசி தேர்தல் போரில் மூத்தவர் (பாதல்) தோல்வியடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "கடினமான சண்டை" பற்றிய எந்தக் குறிப்பையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, மாலூட்டில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த ஒரு தொழிலதிபரான பிரின்ஸ் கூறினார்: "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஓ வாடே பாதல் சாப் நே (அவர் பாதல் மூத்தவர்), அவரை யாரால் தோற்கடிக்க முடியும்?’’
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.