/indian-express-tamil/media/media_files/FzF8K06w0Y4k79DOESFb.jpg)
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவர் மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவரது மகன் வெற்றி துரைசாமி. இந்நிலையில் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் என்பவர் காரை ஓட்டினார்.
இந்நிலையில் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை அவரை பற்றிய தகவல் ஏதும் வெளியாக வில்லை. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சைதை துரைசாமி மகன் குறித்து தகவல் அறிய 2 நாளாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இமாச்சலப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.