/tamil-ie/media/media_files/uploads/2018/06/salman-khan.jpg)
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 5 கோடி கேட்டு வாட்ஸ் ஆப் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Salman Khan gets fresh threat: ‘Pay Rs 5 crore to end enmity with Lawrence Bishnoi’
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவல் அனுப்பிய நபரை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோய்-உடனான நீண்ட நாள் பகையை முடித்துக் கொண்டு, சல்மான் கான் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையை விட மோசமான செயல் அரங்கேறும் எனவும் வாட்ஸ் ஆப் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாபா சித்திக் கடந்த வாரம் பாந்த்ராவில் உள்ள தனது மகனின் அலுவலகம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சல்மான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்திலும் சல்மான் கான் வீட்டின் மீது இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.